நம்ம ஆடுகளம் கிஷோரா இது.. வெப்சீரிஸ்ல ஏகப்பட்ட படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடுறாரே!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கிஷோர் கடந்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து அசத்தி உள்ளார்.
2022ல் மட்டும் ஆச்சார்யா, சேகர், டைரி, டிராமா, காந்தாரா, பொன்னியின் செல்வன், மஞ்ச குருவி உள்ளிட்ட படங்களிலும் ஷீ, பேட்டைக்காளி உள்ளிட்ட வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியான அந்த ஷீ வெப்சீரிஸ் காட்சிகள் தற்போது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

ஆடுகளம் கிஷோர்
கன்னட நடிகரான கிஷோர் 2004ம் ஆண்டு வெளியான கண்டி எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். தமிழில் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் வில்லன் டேனியல் பாலாஜியின் அண்ணனாக அசத்தியிருப்பார் கிஷோர். அதன் பின்னர் ஆடுகளம், வடசென்னை படங்களிலும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

ரவிதாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் கதாபாத்திரத்தில் மந்திரவாதியாக நடித்திருப்பார் கிஷோர். பொன்னியின் செல்வன் பார்ட் 2விலும் கிஷோருக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன.

காந்தாரா வன அதிகாரி
இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த காந்தாரா படத்தில் வன அதிகாரி முரளிதர் கதாபாத்திரத்திலும் கிஷோர் தான் நடித்திருப்பார். ஆரம்பத்தில் வில்லனாக காட்டப்படும் கிஷோர், கடைசியில் ஊர் மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்று விடுவார்.

ஷீ வெப்சீரிஸ்
தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி கடந்த ஆண்டு இந்தி வெப்சீரிஸிலும் கிஷோர் சும்மா புகுந்து விளையாடி உள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான She வெப்சீரிஸில் நாயக் எனும் கதாபாத்திரத்தில் போதை பொருள் கடத்தல் செய்யும் மாஃபியா கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பார். இவரை பிடிக்க அந்த வெப்சீரிஸின் நாயகி அதிதி போஹன்கர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக வந்து இவர் மீது காதல் வயப்படும் கட்டிலறை காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கின.

ஆபாசத்தின் உச்சம்
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்த கிஷோரா இந்த வெப்சீரிஸில் இவ்வளவு ஆபாச காட்சிகளில் இறங்கி நடிச்சிருக்காரு என ரசிகர்களை ஒரு நிமிஷம் தலையே சுற்ற வைத்து விட்டது. கேங்ஸ்டரான நாயக் ஓரே ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் வலையில் விழுவதுமாக அவளால் கொல்லப்படுவதுமாக அந்த வெப்சீரிஸின் கதை அமைந்திருக்கும்.

உச்சகட்டம் தொட்டவளே
தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் இளம் பெண்ணாக நடித்த அதிதி போஹன்கர் பாலிவுட்டில் ஷீ வெப்சீரிஸில் பூமிகா பர்தேசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கான்ஸ்டபிளான அவர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக மாறி ஒரு பெரிய போதைப் பொருள் கேங்கையே பிடிக்க பல முக்கிய வில்லன்களுடன் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் இந்த வெப்சீரிஸ் முழுக்க நிறைந்திருக்கும். கதைக்காக பார்க்கிறார்களோ இல்லையோ அந்த காட்சிகளுக்காகவே அந்த வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் டப்பிங்கில் பேசப்படும் ஆபாச வசனங்கள் எல்லாம் எல்லை மீறி எங்கேயோ சென்று விட்டன.

கிஷோரா இப்படி
நாயக் எனும் மாஸான வில்லன் கதாபாத்திரத்தில் அந்த வெப்சீரிஸில் மிரட்டி இருந்தாலும், நடிகையின் உள்ளாடை எல்லாம் கழட்டி உடலுறவு கொள்ளும் காட்சிகளில் எல்லாம் முழு நிர்வாணமாகவே நடித்து முகம் சுளிக்க வைத்திருப்பார். நம்ம ஆடுகளம் கிஷோரா இப்படி என நெட்டிசன்கள் அந்த வெப்சீரிஸ் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











