ஓடிடியில் வெளியான காந்தாரா சாப்டர் 1 - குவியும் ரெஸ்பான்ஸ்.. இதிலும் சாதனை படைக்குமா?
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் ஓடிடியில் இன்று வெளியாகியிருக்கிறது. தியேட்டருக்கு சென்று பார்க்காதவர்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் மகிழ்ச்சியோடு பார்த்துவருகிறார்கள்.
கன்னட திரையுலகம் ஒருகாலத்தில் மற்ற மொழி திரைப்படங்களை ரீமேக் செய்துகொண்டிருந்தன. கிச்சா சுதீப், உபேந்திரா போன்றோர் வாலி, பிதாமகன், வரலாறு என பல படங்களை அங்கு ரீமேக் செய்து நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு போல் கன்னட மொழி படங்களும் எப்போதுதான் பாக்ஸ் ஆஃபிஸில் ஆதிக்கம் செலுத்துமோ என்ற பேச்சு அத்திரைத்துறையில் ரொம்ப காலமாகவே ஓடிக்கொண்டிருந்தது.
மெகா ஹிட்டான காந்தாரா: இப்படிப்பட்ட சூழலில் நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தை இயக்கினார். நாட்டு தெய்வங்களையும் அதன் வழிபாடுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. ரொம்பவே குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம்: சூழல் இப்படி இருக்க அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தின் முன் கதையாக உருவாக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்: கண்டிப்பாக இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. டெக்னிக்கலாகவும், மேக்கிங் ரீதியாகவும் படம் உயரத்தில் இருப்பதாக கொண்டாடினார்கள் ரசிகர்கள். வசூலிலும் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது திரைப்படம். உலகம் முழுவதும் அந்தப் படம் மொத்தமாக 600 கோடி ரூபாய் அள்ளி சாதனை செய்திருக்கிறது.
ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் அந்தப் படம் இன்று ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டருக்கு சென்று பார்க்காதவர்களும், ஏற்கனவே பார்த்தவர்களும் மகிழ்ச்சியோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் திரையரங்கில் பெற்ற ரெஸ்பான்ஸை போன்றே ஓடிடியிலும் காந்தாரா பெரிய ரெஸ்பான்ஸை பெறும் என்ற நம்பிக்கையையும் ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











