ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. KPY பாலாவின் காந்தி கண்ணாடி ஓடிடியில் ரிலீஸானது.. எதில் தெரியுமா?
சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா; ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அடிக்கடி செய்யக்கூடியவர். இதன் காரணமாக அவர் மீது ரசிகர்கள் தனி மதிப்பு வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் அடைந்தவர் பாலா. தனக்குள் இருக்கும் காமெடி திறமையை அந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்திய அவரை ரசிகர்கள் ரசித்ததால்; அவரை வெளியே எங்கேயும் விடாமல் தன்னுடன் வைத்துக்கொண்டது விஜய் டிவி. அந்த நிகழ்ச்சி தவிர்த்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அவர்; பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைக்கும் உயர்ந்தார்.
உதவி என்றால் பாலா: நிகழ்ச்சிகள் மூலம் வரும் வருமானத்தை வைத்து ஏழை, எளியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அவர் தொடர்ந்து செய்துவருகிறார். ஆம்புலன்ஸ் வழங்குவது, பெட்ரோல் பங்க் இளைஞருக்கு இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுத்தது, துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநய்க்கு நிதியுதவி செய்தது என வரிசையாக அவரது உதவிக்கரங்கள் நீண்டுகொண்டே சென்றன.

ஹீரோ பாலா: அவர் தொடர்ச்சியாக செய்யும் உதவிகள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மதிப்பு உருவானது. சூழல் இப்படி இருக்க காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பாலா. இதற்கு முன்னர் விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் ஒரு ரோலை அவர் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வெளியான காந்தி கண்ணாடி படத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்க்க சென்றார்கள்.
எழுந்த சர்ச்சை: படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பை கொடுத்தார்கள். இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது ஏகப்பட்ட சர்ச்சைகள் பாலாவை பற்றி வந்தன. அதாவது அவர் செய்யும் உதவிகள் அனைத்துமே போலியானதுதான்; யாருக்கோ பினாமியாக இருந்து செயல்படுகிறார் என்று ஒருதரப்பினர் பேசினார்கள். அதனை பாலா திட்டவட்டமாக மறுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
ஓடிடியில் ரிலீஸ்: ஒருவழியாக அந்தப் பஞ்சாயத்து எல்லாம் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் காந்தி கண்ணாடி திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. தற்போது அந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டர்களில் கிடைத்ததைவிட ஓடிடியில் படத்துக்கு ரெஸ்பான்ஸ் அதிகம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் படக்குழு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











