Don't Miss!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- News
நாய்க்கு கூட சொத்தில் பங்குண்டு.. ஆனால் ட்ரம்ப்புக்கு இல்லை..முதல் மனைவி இவானா எழுதிய உயில் ரகசியம்
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ஓடிடியில் இந்த வாரம் இவ்ளோ படங்கள் ரிலீசாக இருக்கா... அப்டேட் இதோ!
சென்னை : ஓடிடியில் படங்கள் ரிலீசாவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
Recommended Video
சிறிய பட்ஜெட் படங்கள், திரையரங்குகளில் ரிலீசான படங்கள் என ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன.
இந்த வாரமும் 10க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.
மார்ச்-ல் ஓடிடியில் வெளியாகும் சாணி காயிதம்.. லேட்டஸ்ட் அப்டேட்!

100% பார்வையாளர்களுக்கு அனுமதி
கொரோனா காரணமாக திரையரங்குகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகப்படியான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று படங்களை சிறப்பான அனுபவத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ் படங்கள்
இதனிடையே ஓடிடியில் படங்கள் ரிலீசாவதும் தவிர்க்க முடியாத விஷயமாகியுள்ளது. அதிலும் கொரோனா காலங்களில் பல படங்களுக்கு ஓடிடியே சிறப்பான வகையில் கைக்கொடுத்து. பல முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் நேரடியாக ரிலீசாகி ரசிகர்களை என்டர்டெயின் செய்தன.

வாழ்வு பெறும் சிறிய பட்ஜெட் படங்கள்
இது மட்டுமில்லாமல் ஓடிடிக்களால் சிறிய பட்ஜெட் படங்களும் சிறப்பான வகையில் ரசிகர்களுக்கு கிடைக்கின்றன. ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான படங்கள் ரிலீசாகி வருகின்றன. சில படங்கள் நேரடியாகவும் சில படங்கள் திரையரங்க ரிலீசுக்கு பின்னரும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பார்வைக்கு கிடைக்கின்றன.

ரசிகர்கள் ஆதரவு
லோ பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சில படங்களை ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விடுகின்றன. திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத இத்தகைய படங்கள் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் ரசிகர்களை கவர்ந்து அதிகப்படியான பார்வைகளை ஓடிடி ரிலீசில் பெற்று சாதித்து விடுகின்றன.

ஓடிடியில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள்
சூர்யாவின் ஜெய்பீம், விக்ரமின் மகான் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. இந்தப் படங்களை திரையரங்குகளில் பார்க்க விரும்பிய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தவிடு பொடியாகின. ஆயினும் ஹோம் தியேட்டர் உள்ளிட்டவற்றில் பார்த்து ரசிகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

ஓடிடியால் ஆசுவாசம்
இத்தகைய படங்களை குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று பார்க்க ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டிய குடும்ப தலைவர்களின் பாரமும் ஓடிடி ரிலீசால் கணிசமாகவே குறைந்துள்ளது. அதற்கு அவர்கள் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றனர். வாராவாரம் ஓடிடியில் ஏராளமான படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாரமும் 10க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

10க்கும் மேற்பட்ட படங்கள்
இந்த வாரம் ஏற்கனவே திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த பங்காருராஜு, ஹிருதயம் உள்ளிட்ட படங்களும் ஓடிடியில் வெளியாக உள்ளன. இதேபோல ஸ்ருதிஹாசனின் பெஸ்ட்செல்லர், மலையாளப் படமான மெப்படியான் ஆகிய படங்களும் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

படங்கள், வெப் தொடர்கள்
தமிழில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் விலங்கு, எனிமி, இரை ஆகியவை வெளியாகவுள்ளன. எ தர்ஷ்டே, த்ரிஷ்யா2, ஹுமா குரேஷியின் மித்யா, பேமிலி பேக், இறுதிப்பக்கம் போன்ற படங்களும் இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.