Don't Miss!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Lock Upp Grand Finale: கங்கனா ரனாவத்தின் ஓடிடி ஷோவில் வின்னர் யாரு தெரியுமா? இத்தனை பரிசுகளா!
மும்பை: கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய ஓடிடி ஷோவான லாக்கப் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற அதன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கி டைட்டில் வென்று கோப்பையை தட்டிச் சென்றார்.
சூரியை
ஓவர்டேக்
செய்த
விஜய்சேதுபதி..
கேஜிஎஃப்
3
எப்படி
இருக்கும்..
பிகேவின்
டாப்
5
பீட்ஸ்
இதோ!
மற்றொரு போட்டியாளரான பிரின்ஸ் நருலாவின் ட்விஸ்ட்டை கங்கனா ரனாவத் ரிவீல் செய்த போது ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஷாக் ஆகினர்.

பிக் பாஸ் மாதிரியே
பிக் பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட்டில் சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் நிலையில், அதே போன்றவொரு நிகழ்ச்சியை ஓடிடியில் கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வந்தார். மிகப்பெரிய ஜெயில் செட்டப்பில் போட்டியாளர்களை கைதிகளை போல் உள்ளே அனுப்பி அவர்கள் எப்படி சர்வைவ் பண்ணுகின்றனர் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சுருக்கம்.

பூனம் பாண்டே பங்கேற்பு
பாலிவுட்டின் சர்ச்சை குயின் பூனம் பாண்டே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கங்கனா ரனாவத் மற்றும் பூனம் பாண்டே இருக்கும் இந்த நிகழ்ச்சியில் டிரான்ஸ் போட்டியாளர் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை 24 மணி நேரமும் என்டர்டெயின் செய்தனர். ஏகப்பட்ட சர்ச்சைகளும் இந்த ரியாலிட்டி ஷோவில் அரங்கேறின.

கோப்பை வேணுமா நடிக்க சான்ஸ் வேணுமா
கிராண்ட் ஃபினாலேவை தொகுத்து வழங்கிய கங்கனா ரனாவத் பிரின்ஸ் நருலாவுக்குத் தான் கோப்பை போகப் போகிறது என முதலில் ட்விஸ்ட் வைத்தார். மேலும், இவர் கைதியே கிடையாது. இவரது கான்ட்ராக்ட் படி கைதியாக நடிக்கும் ஒரு உளவாளி இவர் என கங்கனா சொன்னதும் பலரும் ஷாக் ஆகினர். கோப்பை வேண்டுமா? அல்லது ஏக்தா கபூர் தயாரிக்கும் புதிய புராஜெக்டில் லீடு ரோலில் நடிக்கும் சான்ஸ் வேண்டுமா? என கங்கனா கேட்டதும், நான் ரியல் கைதியே கிடையாது. அதனால் இந்த கோப்பைக்கு நான் தகுதியற்றவன். எனக்கு நடிக்கும் வாய்ப்பு தான் வேண்டும் என சான்ஸை பெற்றுக் கொண்டார்.

யாருக்கு டைட்டில்
கடைசியாக அதிக ஓட்டுக்களுடன் முன்னிலையில் இருந்த ஸ்டாண்டப் காமெடியன் முனாவர் ஃபரூக்கிற்கு லாக்கப் முதல் சீசன் வின்னர் டைட்டில் கிடைத்தது. வெற்றிப் பெற்ற முனாவரை நடிகை கங்கனா ரனாவத் கட்டியணைத்து பாராட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இத்தனை பரிசுகளா
வெற்றிப் பெற்ற முன்னா ஃபரூக்கிற்கு 20 லட்சம் ரூபாய்க்கான செக், ஒரு சொகுசு கார் மற்றும் இத்தாலி நாட்டுக்கு போவதற்கான ஒரு டூர் ட்ரிப் என ஏகப்பட்ட பரிசுகளை கொடுத்து அசத்தி விட்டனர். வெற்றி பெற்ற முனாவர் ஃபரூக்கிற்கு பூனம் பாண்டே உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.