Lokah OTT date: ஒருவழியா துல்கர் சல்மானுக்கு மனசு வந்துடுச்சு.. லோகா ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
சென்னை: துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி, டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மலையாள திரையுலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த படமாக மாறிய லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தீபாவளிக்கே ஓடிடியில் லோகா திரைப்படம் வெளியாகி விடும் என ஏகப்பட்ட யூகங்கள் மற்றும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு அதிகாரப்பூர்வமாக கடைசி வரை அறிவிக்கவில்லை. தீபாவளி தினத்தன்றும் ஓடிடியில் பெரிதாக ரசிகர்களுக்கு படம் இல்லாத நிலையில், தியேட்டரில் வெளியான டியூட், பைசன் படங்களை பார்க்க கிளம்பி விட்டனர்.

டொமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதையாக உருவான லோகா சாப்டர் 1: சந்த்ரா படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நீலி கதாபாத்திரத்தில் யக்ஷியாக நடித்து மிரட்டி ஒட்டுமொத்த மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் அனைத்துக்கும் வேட்டு வைத்துவிட்டார்.
மோகன்லாலை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்: மலையாள திரையுலகை மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளாக கட்டி ஆண்டு வருகின்றனர். துல்கர் சல்மான், பிரித்விராஜ், பகத் ஃபாசில் என ஏகப்பட்ட நடிகர்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை கொடுத்து வரும் நிலையில், இந்த ஆண்டு மோகன்லால் நாம தான் மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்க வேண்டும் என எம்புரான், தொடரும் மற்றும் ஹிருதயப்பூர்வம் என 3 படங்களை வெளியிட்டார். எம்புரான் மற்றும் தொடரும் படங்கள் 250 கோடி வசூலை ஈட்டிய நிலையில், ஹிருதயப்பூர்வம் திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியது. மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்துடன் போட்டியாக வெளியான லோகா திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டி மோகன்லால் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள நடிகர்களையும் பாக்ஸ் ஆபீஸில் பின்னுக்குத்தள்ளிவிட்டார்.
தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் குயின்: அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் குயினாக மாறி நயன்தாரா, அனுஷ்கா என ஏகப்பட்ட டாப் ஹீரோயின்களை பின்னுக்குத்தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் லோகா படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்தார்.
லோகா ஓடிடி ரிலீஸ் தேதி: தீபாவளிக்கு லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாகாத நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் லோகா திரைப்படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் லோகா படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர்ச்சியான பாகங்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். அடுத்த மாதம் அவர் நடித்துள்ள காந்தா படம் வெளியாகி எந்தளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கிறது என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











