Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஓடிடியில் பட்டிமன்றம் மட்டுமில்லை.. லொள்ளு சபாவும் வருது.. Brreaking Bad வெப்சீரிஸ் தான் முதல் பலி கடா!
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பொங்கலுக்கு சிறப்பு பட்டிமன்றம் போடப்பட்ட நிலையில், அடுத்ததாக பிரேக்கிங் பேட் வெப்சீரிஸை ஸ்பூஃப் செய்ய லொள்ளு சபா டீமை வைத்து ஜோக்கிங் பேட் எனும் புதிய ஷோவை உருவாக்கி உள்ளனர்.
ஓடிடி ஜெயண்ட் ஆன நெட்பிளிக்ஸ் இந்திய சந்தையை பிடிக்க முடியாமல் ரொம்பவே திணறி வருகிறது. அந்த ஓடிடியில் வெளியாகும் படங்கள் கூட மொக்கை படங்களாக மாறிய நிலையில், ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்கள் குறைந்து விட்டனர்.
இந்நிலையில், பல கோடி முதலீட்டில் எப்படியாவது ஓடிடி மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என பட்டிமன்றம், வெப்சீரிஸ் ஏகப்பட்ட புதிய படங்கள் என களமிறங்கி உள்ளது.
விபத்துக்குப் பிறகு சுயநினைவை இழந்தாரா விஜய் ஆண்டனி...? சிகிச்சைக்கு நாள் குறித்த மருத்துவர்கள்?

மீண்டும் லொள்ளு சபா
விஜய் டிவியில் புதிய படங்களை ட்ரோல் செய்து சந்தானம், ஜீவா, மனோகர் உள்ளிட்ட நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சினிமாவிலும் காமெடி நடிகர்களாக கலக்கினர். முன்னணி ஹீரோக்களின் படங்களை ஓவராக ஓட்டிய நிலையில், கிளம்பிய சர்ச்சை காரணமாக அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் லொள்ளு சபா நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஜோக்கிங் பேட்
நெட்பிளிக்ஸில் பிரபலமான பிரேக்கிங் பேட் வெப்சீரிஸை ஸ்பூஃப் செய்து ஜோக்கிங் பேட் எனும் டைட்டிலில் சுவாமிநாதன், ஜீவா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புதிய ஷோ வெளியாக உள்ளது. அதன் அறிவிப்பு டீசருடன் வெளியாகி ரசிகர்களை மீண்டும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

எப்போ ரிலீஸ்
வரும் ஜனவரி 20ம் தேதி மாலை 6 மணிக்கு ஜோக்கிங் பேட் வெப்சீரிஸ் ஸ்பூஃப் வீடியோ வெளியாகிறது. புதிய படங்களுக்கு பதிலாக நெட்பிளிக்ஸின் வெப்சீரிஸை கலாய்த்து வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே டீம் ரசிகர்களை எந்தளவுக்கு என்டர்டெயின் பண்ண போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தமிழ் டப்பிங்
இதை பண்றதுக்கு பதிலா பிரேக்கிங் பேட் தமிழ் டப்பிங்கை ரிலீஸ் செய்திருக்கலாம் என பிரேக்கிங் பேட் ரசிகர்கள் ரொம்பவே வருத்தம் தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். நெட்பிளிக்ஸ் இந்த பொங்கலுக்கு ராஜா தலைமையில் பட்டிமன்றம் ஒன்றையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், துணிவு முதல் ஏகே 62 வரை பல படங்களின் உரிமையையும் கைப்பற்றி உள்ளது.

துணிவு வாரிசு ஸ்பூஃப் பண்ணா
பிரேக்கிங் பேட் வெப்சீரிஸை ஸ்பூஃப் செய்வதை விட பொங்கல் ரிலீஸாக வந்த துணிவு மற்றும் வாரிசு படத்தை ஸ்பூஃப் செய்தால் வேறலெவலில் முதல் எபிசோடே டிரெண்டாகி விடும் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த இரண்டு படங்களே ஸ்பூஃப் தான் இதில் தனியாக வேற ஸ்பூஃப் பண்ணனுமா என்றும் கமெண்ட் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.