ஓடிடியில் நேரடியாக மோதும் சிம்பு… தனுஷ்… அடுத்த அதிரடி ரெடி!!

சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் பட்டையை கிளப்பிய மாநாடு திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

வி ஹவுஸ் புரோடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியத் இத்திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஓய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

மாநாடு

மாநாடு

டைம் லூப் முறையில் முதன் முறையாக இப்படம் வெளியாகி உள்ளது. டைம் லூப் முறையில் ஆங்கிலத்தில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் தமிழிக்கு இது புதுசு... டைம் ட்ராவல் திரைப்படத்தை பார்த்துப்பழகிப்போன நமக்கு புதுமையான டைம் லூப் திரைப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் வெங்கட் பிரபு.

சிம்புக்கு கம்பேக்

சிம்புக்கு கம்பேக்

உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்குடன் சும்மா சிக்குனு வந்த சிம்புக்கு இத்திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சிம்பு ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார்.

நவம்பர் 25ந் தேதி

நவம்பர் 25ந் தேதி

மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போதே பிரச்சினைகளும் ஒவ்வொன்றாக வெடித்தன. முட்டி மோதி ஒரு வழியாக மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் முடிந்து படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாவதால் படம் நவம்பர் 25ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பல சிக்கல்

பல சிக்கல்

மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி வெளியாக இருந்த நிலையில் , நவம்பர் 24ந் தேதி இரவு, தவிர்க்கமுடியாத காரணத்தால் நாளை படம் வெளியாகாது என ட்விட்டரில் அறிவித்து பீதியை கிளப்பினார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து, பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டு நவம்பர் 25ந் தேதி காலை தாமதமாக வெளியானது.

பல கோடி வசூல்

பல கோடி வசூல்

அனைத்து தரப்பு மக்களும் புகழ்ந்து பாராட்டக்கூடிய வகையில் படம் இருந்தது. குறிப்பாக அப்துல் காலிக்காக நடித்த சிம்புவின் கதாபாத்திரமும், தனுஷ்கோடியாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரமும் படத்திற்கு பக்க பலமாக அமைந்து பல கோடி வசூலை வாரிக்குவித்தது.

ஓடிடியில்

ஓடிடியில்

இந்நிலையில், மாநாடு திரைப்படம் டிசம்பர் 24ந் தேதி சோலி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேரடி மோதல்

நேரடி மோதல்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அத்ரங்கி ரே' படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. சிம்பு மற்றும் தனுஷ் திரைப்படங்கள் ஒடிடியில் நேரடியாக மோத உள்ளன. இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X