இந்த வாரம் ஓடிடியில் வெளியான மாயக்கூத்து.. எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
சென்னை: குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள "மாயக்கூத்து" திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. டெண்ட்கோட்டா OTT தளத்தில் இந்த வாரம் இப்படம் வெளியாகி உள்ளது.
எழுத்தாளர் வாசனின் கற்பனையில் உருவான கதாபாத்திரங்கள், அவரது நிஜ வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதையின் முக்கிய கருவாகும்.

வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், மேலும் கதைக்கு ஏற்ற நடிப்பையும் அழுத்தத்தையும் வெளிப்படுத்திய புதுமுகங்கள் இந்தத் திரைப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கியுள்ளார்.
நாகராஜன் கண்ணன், வாசன் என்ற கதாபாத்திரத்தில் தனது உணர்ச்சிபூர்வமான மற்றும் இயல்பான நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் பங்களிப்பும் திரைப்படத்தின் உணர்வுபூர்வமான ஆழத்தை மேம்படுத்துகிறது.
பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே கதைக்குத் தேவையான சிறப்பான இசையை வழங்கியுள்ளார். படத்தின் ஐந்து பாடல்களும் புதுமையாகவும், இனிமையாகவும், ஆழமான பொருள் பொதிந்ததாகவும் அமைந்துள்ளன.
"மாயக்கூத்து" என்பது தங்களது கலையை மட்டுமே நம்பி பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், மிகப்பெரிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மையான முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல; ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னமாகும். இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் ஆதரிப்பதன் மூலமே புதிய படைப்பாளர்களும், தரமான திரைப்படங்களும் வெளிவர வாய்ப்பு ஏற்படும்.
இந்த வாரம் செப்டம்பர் 19ம் தேதி டெண்ட்கோட்டா OTT தளத்தில் "மாயக்கூத்து" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











