Malaika Arora: விவாகரத்தான பொண்ணுன்னா இப்பவும் கேவலமாத்தான் பார்க்கிறாங்க.. மலைகா அரோரா பளிச்!
மும்பை: 50 வயதில் 2வது திருமணத்துக்கு ரெடியாகி வரும் பாலிவுட் நடிகை மலைகா அரோரா சமீபத்தில் அளித்த பேட்டி தீயாக பரவி வருகிறது.
தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரின் காதலி தான் மலைகா அரோரா.ஷாருக்கானின் உயிரே படத்தில் தக்கை தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவரும் இவர் தான்.
நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொண்ட மலைகா அரோரா விரைவில் ஓடிடியில் அறிமுகமாகவுள்ளார்.

மலைகா அரோரா
பாலிவுட்டின் கவர்ச்சி குத்தாட்ட நடிகையாக வலம் வருபவர் நடிகை மலைகா அரோரா. 1998ல் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா தையா பாடலுக்கு ரயிலில் நடனமாடிய மலைகா அரோரா ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

நடிகருடன் விவாகரத்து
1998ம் ஆண்டு பாலிவுட்டின் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2002ல் இந்த தம்பதியினருக்கு அர்ஹான் எனும் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2017ம் ஆண்டு மலைகா அரோராவுக்கும் அர்பாஸ் கான் இடையே கருத்து மோதல் ஏற்பட இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். மகனை தனது கஸ்டடியில் வைத்து வளர்த்து வருகிறார் மலைகா அரோரா.

50லும் காதல் வரும்
49 வயதை கடந்த நடிகை மலைகா அரோரா. போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வருவது பாலிவுட் வட்டாரத்தில் பெருமளவு ட்ரோல் செய்யபட்டு வருகிறது. அடிக்கடி இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாக வதந்திகளையும் பரப்பி மலைகா அரோராவை அப்செட் ஆக்கி வருகின்றனர்.

ஓடிடியில் அறிமுகம்
கீப்பிங் அப் கர்தாஷியன் என கிம் கர்தாஷியன் ஹாலிவுட்டில் ஒரு ரியாலிட்டி ஷோ போல தன்னையும் தனது வாழ்க்கை பற்றியும் ஒரு ஷோ நடத்தி வரும் நிலையில், அதே போல ஒரு ரியாலிட்டி ஷோவாக மலைகா அரோராவின் வாழ்க்கை பற்றிய நிகழ்ச்சி விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது. Moving in with Malaika Arora என்கிற டைட்டிலில் உருவாகி உள்ள அந்த தொடர் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது. அதுதொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்மீதான ட்ரோல்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

விவாகரத்து ஆனாலே
ஆண்கள் விவாகரத்து செய்து விட்டு எத்தனை திருமணம் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். முன்னணி நடிகர்களாக அவர்கள் மதிக்கப்படுவார்கள். ஆனால், அதையே ஒரு பெண் விவாகரத்து செய்தால் இப்பவும் அவளை கீழ்த்தரமாக பார்க்கும் எண்ணம் தான் இந்த சமூகத்தில் நிலவி வருகிறது. விவாகரத்தான பெண்கள் மற்றும் சிங்கிள் மதரின் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. தினமும் என்னைப் பற்றிய ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் நிறைய குவிந்து வந்தாலும், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் புத்தி அவ்வளவு தான் என கடந்து சென்று விடுவேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











