For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பழிக்குப் பழி வாங்க துடிக்கும் மம்முட்டி… ரோர்சாக் விமர்சனம்… ஓடிடி ரசிகர்களுக்கு திரில்லர் ட்ரீட்

  |

  சென்னை: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள ரோர்சாக் திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  நிசாம் பஷீர் இயக்கியுள்ள ரோர்சாக் படத்துக்கு திரையரங்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

  இதனைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ரோர்சாக் ஓடிடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..ரச்சித்தாவிடம் வரம்பு மீறும் ராபர்ட் மாஸ்டர்!என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..ரச்சித்தாவிடம் வரம்பு மீறும் ராபர்ட் மாஸ்டர்!

  மம்முட்டியின் ரோர்சாக்

  மம்முட்டியின் ரோர்சாக்

  மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி 70 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். கடந்த அக்டோபர் 7ம் தேதி மம்முட்டி நடிப்பில் வெளியான 'ரோர்சாக்' திரைப்படம் இப்போது ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 'கெட்டியோலானு என்டே மலாக்கா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நிசாம் பஷீர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டியுடன் கிரேஸ் ஆண்டனி, பிந்து பனிக்கர், அசீப் அலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  லூக் ஆண்டனியின் கதை

  லூக் ஆண்டனியின் கதை

  சிறிய கிராமத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்லும் லூக் ஆண்டனி, தன்னுடைய கார் விபத்தில் சிக்கிவிட்டதாகவும், மயக்கம் தெளிந்து பார்க்கும் போது தனது மனைவியை காணவில்லை எனவும் புகார் கொடுக்கிறார். உடனடியாக கார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விசாரிக்கும் போலீஸார் லூக் ஆண்டனியின் மனைவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். மனைவி கிடைக்கும் வரை அதே கிராமத்தில் தான் இருப்பேன் என அங்கேயே கட்டி முடிக்கப்படாத வீட்டை சொந்தமாக வாங்குகிறார் லூக் ஆண்டனி.

  பழிக்குப் பழி போராட்டம்

  பழிக்குப் பழி போராட்டம்

  லூக் ஆண்டனியிடம் வீட்டை விற்கும் ராஜன் கொலை செய்யப்பட, அவரிடம் இருந்த பணம் மாயமாகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கணவரை இழந்த சுஜாதா என்பவரை திருமணம் செய்கிறார் லூக் ஆண்டனி. அதோடு சுஜாதா நடத்தி வந்த சிறிய தொழிற்சாலையையும் இயங்கவிடாமல் மறைமுகமாக தடுக்கிறார். இன்னொரு பக்கம் லூக் ஆண்டனி யார், எங்கிருந்து வந்தார், அவரது மனைவி என்ன ஆனார் என்பதை அஷ்ரப் என்ற போலீஸ் கண்டுபிடிக்கிறார். அதன்பின்னர் நடக்கும் சில அதிரடியான திருப்பங்கள் தான் கதை.

  மனைவிக்காக கொலை

  மனைவிக்காக கொலை

  லூக் ஆண்டனியாக மம்முட்டி, துபாயில் மனைவியுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் இரண்டு இளைஞர்கள் கொள்ளையடிக்க முயற்சிக்க, அப்போது மம்முட்டியின் மனைவி கொலை செய்யப்படுகிறார். அப்போது இளைஞர்களில் ஒருவரை மம்முட்டியும் கொலை செய்துவிடுகிறார். அதன் பின்னர் தப்பித்த இளைஞன் யார் என தேடி கேரளா செல்லும் மம்முட்டி, அந்த இளைஞன் உயிருடன் இல்லை என்று தெரிந்தும் அவரது குடும்பத்தை பழிவாங்கத் துடிக்கிறார். அதற்காக அவர் ஆடும் நாடகம் எல்லாம் மிரட்டலான சம்பவங்கள். அதேபோல் தனது குடும்பத்தின் மானம் போய்விடக்கூடாது என அந்த இளைஞனின் அம்மா எடுக்கும் அவதாரம் மாஸ்.

  மம்முட்டி என்ற அரக்கன்

  மம்முட்டி என்ற அரக்கன்

  Halloween style கேரக்டரில் நடித்துள்ள மம்முட்டி காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார். தெளிவான மனநிலையில் இல்லாத லூக் ஆண்டனியின் இயல்பான உடல் மொழியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அதேபோல், சுஜாதாவாக வரும் கிரேஸ் ஆண்டனி, சீதாவாக வரும் பிந்து பனிக்கர் ஆகியோரின் கேரக்டர்கள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை தருகின்றன. மிதுன் முகுந்தனின் பின்னணி இசை பல இடங்களிலும் சிலிர்ப்பை தருகின்றன.

  ரோர்சாக் மைனஸ்

  ரோர்சாக் மைனஸ்

  சைக்கலாஜிக்கல் திரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள ரோர்சாக், திரைக்கதையில் கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது. சைக்கலாஜிக்கல் திரில்லர் என்பதால், மெதுவாக கதை சொன்ன இயக்குநர் நிஷாம் பஷீர் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். மற்றபடி இந்த வாரம் திரில்லர் படம் எதிர்பார்க்கும் ஓடிடி ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் என்றால் அது ரோர்சாக் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

  English summary
  Mammootty starrer Rorschach hit the theaters on October 7. Following that, this film is now streaming on Hotstar OTT. Here is a special Tamil review of Rorschach, a psychological thriller film
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X