twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன், நானே வருவேன்… திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் மோதல்…?

    |

    சென்னை: தசரா விடுமுறையை முன்னிட்டு தமிழில் தனுஷின் நானே வருவேன், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.

    பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் நானே வருவேன், பொன்னியின் செல்வன் படங்கள் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா.. கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்! பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா.. கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

    நானே வருவேன் ரிலீஸ்

    நானே வருவேன் ரிலீஸ்

    தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான 'நானே வருவேன்' படம், செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம், க்ரைம் திரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகியிருந்தது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், செல்வராகவன் ரசிகர்கள் ரொம்பவே கொண்டாடினர். பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒருநாள் முன்னர் வெளியானதால், பாக்ஸ் ஆபிஸிலும் கொஞ்சம் தடுமாறியது நானே வருவேன். இந்தப் படம் இதுவரை 40 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    சூறையாடிய பொன்னியின் செல்வன்

    சூறையாடிய பொன்னியின் செல்வன்

    லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், இதுவரை 400 கோடி வசூல்; செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்குப் போட்டி

    போட்டிக்குப் போட்டி

    பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், தனுஷின் நானே வருவேன் படம் ஒருநாள் முன்னதாக வெளியானது. இதனால், மறுநாளில் இருந்து நானே வருவேன் வசூல் பயங்கரமாக அடி வாங்கியது. பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நானே வருவேன் படம் ரிலீஸானது தான் இதற்கு காரணம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர் தாணு பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தான் நானே வருவேன் படத்தை வெளியிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மீண்டும் இந்தப் படங்கள் மோதவிருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஓடிடி ரிலீஸ்

    ஓடிடி ரிலீஸ்

    தனுஷின் நானே வருவேன் பட ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமையை 18 கோடிக்கு சன் டிவி வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் அக்டோபர் 30ம் தேதி அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் படம் நவம்பர் 4ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகிறதா என எதிர்பார்க்க வைத்துள்ளது. அதேநேரம் பொன்னியின் செல்வனுக்கு திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நவம்பர் 4ம் தேதி ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது.

    English summary
    Ponniyin Selvan and Nane Varvean films were released in theaters on the occasion of the Dasara holiday. In this, Ponniyin Selvan has been a huge hit. As Amazon has bought the OTT rights of Ponniyin Selvan and Nane Varaevan, it has been reported that both films will be released simultaneously in OTT.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X