Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சிக்ஸ் அவனை தேடி நீ போகாத.. தி கிரே மேன் 2 படத்தின் தாறுமாறான அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் தனுஷ் நடித்த தி கிரே மேன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
உலகளவில் அதிகமானோர் விரும்பி பார்த்த படமாக மாறி உள்ள அதன் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், தி கிரேமேன் படத்தின் கதையில் தனது கதாபாத்திரம் ஹீரோ சிக்ஸிடம் பேசும் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தி க்ரே மேன் படத்தோட மேக்கிங் வீடியோ வெளியீடு.. என்னமா மிரட்டறாரு தனுஷ்!

ஹாலிவுட்டிலேயே செட்டில் போல
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என இந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் தனுஷ் தி கிரேமேன் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் குறைந்த காட்சிகளிலேயே வந்த தனுஷ் அடுத்த பாகத்தின் மூலம் மீண்டும் ஹாலிவுட்டிலேயே செட்டில் ஆகி விடுவார் போல தெரிகிறது என தனுஷ் ரசிகர்கள் தலைவா என கொண்டாடி வருகின்றனர்.

தி கிரேமேன் யூனிவர்ஸ்
மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் போல தி கிரேமேன் யூனிவர்ஸும் பிரம்மாண்டமாக வளர்கிறது என நடிகர் தனுஷே அடுத்த பார்ட்டுக்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். இயக்குநர்கள் ரூசோ மற்றும் ஆண்டனி பிரதர்ஸ் தி கிரேமேனின் அடுத்த பாகம் மற்றும் தனியாக ஒரு ஸ்பின் ஆஃப் படத்தையும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஹீரோ சிக்ஸ்
ஜேம்ஸ் பாண்ட் 007 என்பதால் என் பெயர் சிக்ஸ் என தி கிரே மேன் படத்திலேயே பெயருக்கான விளக்கத்தை காமெடியாக கூறுவார் ஹீரோ ரியான் கோஸ்லிங். கேப்டன் அமெரிக்கா ஹீரோ கிறிஸ் எவான்ஸை கொடூர போலீஸ் அதிகாரியாக காட்டி அவரை முதல் படத்திலேயே போட்டுத் தள்ளிய நிலையில், அடுத்ததாக மெயின் வில்லன் ஆன அந்த அமைப்பின் தலைவரை காலி செய்ய ஹீரோ சிக்ஸ் அடுத்த பாகத்தில் போராட போகிறார் என்பதும், அவருக்கு எதிராக எந்த ஹாலிவுட் ஹீரோ வில்லனாக களம் இறங்கப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

லோன் உல்ஃப் கம்மிங்
கொடுத்த டாஸ்க்கை கச்சிதமாக முடித்துத் திரும்பும் லோன் உல்ஃப்பாக அவிக் சான் எனும் செக்ஸி தமிழ் நண்பன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்த நிலையில், சிக்ஸ் அவனை நீ தேடி போகாத, நான் பார்த்துக்குறேன். நீ தேடி போனால் உன் டைம் தான் வேஸ்ட். அப்படியே நீ முதலில் அவனை கண்டுபிடித்தால், அப்புறம் நான் உன்னை தேடி வர வேண்டியதா இருக்கும் என ஹீரோவே மிரட்டும் ஆடியோ லோன் உல்ஃப் கம்மிங் ஒத்து என சொல்லத் தூண்டுகிறது.