மிர்ச்சி சிவாவின் "இடியட்" ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : சந்தானம் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பாலா அடுத்ததாக மிர்ச்சி சிவாவை வைத்து இடியட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கலகலப்பான காமெடி மற்றும் ஹாரர் படமாக உருவாகி உள்ள இடியட் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது இடியட் படத்தின் ரிலீஸ் டேட் அப்டேட் வெளியாகி உள்ளது.

அட்டகாசமான காமெடி

அட்டகாசமான காமெடி

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலா தமிழ் சினிமாவிலும் இப்பொழுது இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் தமிழில் வெளியான தில்லுக்குதுட்டு என்ற அட்டகாசமான காமெடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிலும் இயக்குனராக அந்தஸ்து மற்ற ராம்பாலா அடுத்ததாக மீண்டும் சந்தானம் உடன் கூட்டணி அமைத்து தில்லுக்குதுட்டு பாகம்-2 இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

பேயுடன் பஞ்ச் டயலாக்

பேயுடன் பஞ்ச் டயலாக்

பேய் என்றால் அனைவரையும் பயமுறுத்தும் என காலம் காலமாக திரைப்படங்களில் காட்டி வந்ததை பார்த்திருப்போம் ஆனால் தில்லுக்குதுட்டு படத்தில் பேயுடன் சரிக்கு சமமாக உட்கார்ந்து பஞ்ச் டயலாக்குகளை பேசி கலாய்த்து சிரிக்கவைத்து என மிக வித்தியாசமான படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற தில்லுக்கு துட்டு முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் அதே பாணியில் வெளியாகி ஹிட்டடித்தது . சந்தனம் உடன் இணைந்து இரண்டு ஹிட்டுகளை கொடுத்த இயக்குனர் ராம்பாலா அடுத்த படத்தில் மிர்ச்சி சிவா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

வெகுளித்தனமான நடிப்பின்

வெகுளித்தனமான நடிப்பின்

அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் மிர்ச்சி சிவா தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டு வருகையில் ராம் பாலாவின் நடிப்பில் உருவாகியுள்ள இடியட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இடியட்

இடியட்

வழக்கமான பேய் படத்தை போல ஒரு மர்ம வீட்டைச்சுற்றி கதையை நடக்கின்றவாறு இருக்க அங்கிருக்கும் பேயுடன் மாட்டிக்கொண்டு எப்படி மீள்வது என்பது பற்றிய படமாக இப்படம் உருவாகி இருக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதலே அதிக அளவில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட இடியட் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வேற லெவல் ஹிட்டடித்தது.

காசேதான் கடவுளடா

காசேதான் கடவுளடா

தமிழ் படம் 1 மற்றும் 2 பாகங்களில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் பங்கமாக கலாய்த்து வெளியாகி இருக்க மிர்ச்சி சிவா அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் . அந்த வகையில் காலத்தால் அழிக்கமுடியாத மிகச் சிறந்த காமெடி படமாக உருவான காசேதான் கடவுளடா இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

இப்படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி உள்ளார். யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவாவின் காம்பினேஷனில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ராம்பாலா கூட்டணியில்

ராம்பாலா கூட்டணியில்

அதை அடுத்து சுமோ, பார்ட்டி,சலூன் , ஆகிய சிவாவுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்க, இயக்குனர் ராம்பாலா கூட்டணியில் முதல் முறையாக இணைந்துள்ள கலகலப்பான ஹாரர் திரைப்படம் இடியட் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஓடிடியில்

ஓடிடியில்

கொரோனாப் பரவல் காரணமாக திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டதால் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது. சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவரும் தங்களது படங்களை காலதாமதம் செய்யாமல் ஓடிடியில் வெளியாகின்றன .

செப்டம்பர் 17ஆம் தேதி

செப்டம்பர் 17ஆம் தேதி

அந்த வரிசையில் மிர்ச்சி சிவா,நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள இடியட் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி இடியட் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இடியட் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

மிகச் சிறந்த காமெடி

மிகச் சிறந்த காமெடி

ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, மயில்சாமி, கருணாகரன்,ரவிமரியா, ஆனந்தராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தில்லுக்குதுட்டு பாகம் 1 மற்றும் பாகம் 2 போலவே இடியட் திரைப்படமும் மிகச் சிறந்த காமெடி படமாக இருக்கும் என ரசிகர்கள் பெரும் ஆவல் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதை அடுத்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

கலாட்டா பேய் படங்களும்

கலாட்டா பேய் படங்களும்

சீரியஸான பேய் படங்களுக்கு மத்தியில் இது போன்ற கலகலப்பான கலாட்டா பேய் படங்களும் அவ்வப்போது வெளியாக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வர இயக்குனர் ராம் பாலா தன்னுடைய வழக்கமான பாணியில் பேய்களை எந்த அளவிற்கு கலாய்க்க முடியுமோ அந்த அளவுக்கு கலாய்த்து எடுத்துள்ளார்.

இடியட் ரிலீஸ் தேதி

இடியட் ரிலீஸ் தேதி

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணியின் கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதால் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் ரசிப்பார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் ஆவலுடன் உருவாகி வந்த இடியட் படத்தின் ரிலீஸ் தேதி தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X