மரக்கர் ஓடிடி ரிலீஸ் எப்போ... மோகன்லாலே சொன்ன அசத்தல் தகவல்

திருவனந்தபுரம் : டைரக்டர் பிரியதர்ஷன் எழுதி, இயக்கி மோன்லால் நடித்துள்ள படம் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம். அதிக பொருட் செலவில் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் இது.

டிசம்பர் 2 ம் தேதி தியேட்டர்களில் பிரம்மாண்டமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆன்டனி பெரம்பாவூர் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இது தான் கதை

இது தான் கதை

16 ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின் படையெடுப்பின் போது கோழிகோட்டை காப்பாற்ற போராடிய மாலுமி குன்ஹலி மரக்கரின் வாழ்க்கையை பற்றியது தான் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் படத்தின் கதை.

மல்டி ஸ்டார் படம்

மல்டி ஸ்டார் படம்

ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரணவ் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், பிரபு, மஞ்சு வாரியர், சுகாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஃபாசில், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோனி ராபெல் இசையமைத்துள்ளார்.

ரிலீசுக்கு முன்பே விருது

ரிலீசுக்கு முன்பே விருது

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் மெகா பட்ஜெட் படமான மரக்கர், ரிலீசாவதற்கு முன்பே 67 வது தேசிய திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்காக தேசிய விருதினை இந்த படம் வென்றுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீசா

நேரடி ஓடிடி ரிலீசா

இந்நிலையில் மரக்கர் படம் எப்போது ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என்பதை மோகன்லாலே தெளிவாக கூறி உள்ளார். பிரபல டிவி மேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த மோகன்லால், இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சில தகவல்கள் கூறி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை. அதனால் தான் அது பற்றி நாங்கள் வாய் திறக்காமல், மெளனமாக இருந்து வந்தோம்.

ஓடிடி ரிலீஸ் எப்போ

ஓடிடி ரிலீஸ் எப்போ

ஆனால் மரக்கர் படம் நிச்சயம் ஓடிடி.,யில் ரிலீசாகும். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும். இது தொடர்பாக ஓடிடி தளங்களுடன், மரக்கர் பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தமும் போட்டு விட்டனர். அதனால் மரக்கர் படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Marakkar படத்தில் Mohanlal உடன் முக்கியமான ரோல் பண்றேன் | Actor Sandeep Narayan | Filmibeat Tamil
ஹாட் டாப்பிக்கான ரிலீஸ்

ஹாட் டாப்பிக்கான ரிலீஸ்

மரக்கர் படம் ரிலீஸ் தொடர்பாக தயாரிப்பாளர் ஆன்டனி பெரம்பாவூர், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் இடையே பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ஆன்டனி பெரம்பாவூர், கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து மரக்கர் பட ரிலீஸ் பற்றிய பேச்சு தான் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X