Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டோக்கியோவையும் சாகடிச்சிட்டாங்களே.. மணி ஹெய்ஸ்ட் 5வது சீசனை பார்த்து கதறி அழும் ரசிகர்கள்!
சென்னை: உலகளவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 நேற்று மதியம் 12:30 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது.
ஒரே மூச்சாக மொத்த சீசனையும் பார்த்து முடித்த ரசிகர்களுக்கு இறுதியில் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
கடந்த சீசனில் நைரோபி கதாபாத்திரம் உயிரிழந்த நிலையில், இந்த சீசனில் டோக்கியோவும் தற்கொலை படையாக மாறி இறந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நைரோபிக்காக.. வெளியானது மணி ஹெய்ஸ்ட் சீசன் 5.. உலகளவில் டிரெண்டாகும் #MoneyHeistSeason5

என்ன கதை
உலகளவில் இத்தனை கோடி ரசிகர்களை கொண்டுள்ள மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிசில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால், பணம் அச்சடிக்கும் வங்கியையே புரொபஸர் எனும் கதாபாத்திரம் கொள்ளையடிக்க திட்டமிட தனக்கு உதவி செய்ய ஒரு கூட்டத்தை உருவாக்கிறார். ஒவ்வொருவரும் உண்மையான பெயர்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் என ஆளுக்கு ஒரு ஊர் பெயரை வைக்க திட்டமிட்டபடி ஹெய்ஸ்ட் நடந்ததா? இல்லையா? என்கிற கதையை சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லி இருப்பதால் தான் இந்த வெப்சீரிஸுக்கு இவ்வளவு ரசிகர்கள்.
|
டோக்கியோ மரணம்
மணிஹெய்ஸ்ட் சீசன் 5 நேற்று ரிலீசானதும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரே மூச்சில் அந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கண்டு ரசித்தனர். கொடூரமான ஆர்ட்டுரோ இறப்பான் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பிரபலமான டோக்கியோ எனும் பெண் கதாபாத்திரம் தற்கொலைப் படையாக மாறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகளவில் டிரெண்டிங்
மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸை பார்த்த ரசிகர்கள் #MoneyHeist எனும் ஹாஷ்டேக்கை நேற்றில் இருந்தே உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 எப்படி இருந்தது என்றும், மணி ஹெய்ஸ்ட் 2வுக்கான அறிவிப்பு கிடைத்த சந்தோஷம் வரை அனைத்தையும் ட்வீட்களாக பகிர்ந்து வருகின்றனர்.

நைரோபியை தொடர்ந்து டோக்கியோ
நைரோபிக்காக என ஆரம்பித்த மணி ஹெய்ஸ்ட் 5வது சீசன் இப்படி டோக்கியாவையும் கொண்டு போய் முடிந்து விட்டதே என ரசிகர்கள் இருவரின் இழப்புக்காக மிகவும் வருந்தி பதிவுகளை போட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இரு சிங்கப் பெண்களும் மணி ஹெய்ஸ்ட்டில் ஆக்ஷனில் அதிரடி காட்டி இருப்பார்கள்.

ஏன் நெட்பிளிக்ஸ்
இந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதியே மணி ஹெய்ஸ்ட் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க நாங்கள் தயார். ஆனால், நெட்பிளிக்ஸ் ஏன் டோக்கியோவை கொன்னுட்டீங்க என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

வெடிகுண்டை ஏன் வீசல
டோக்கியோ உடல் முழுக்க ரஜினிகாந்த் போல அத்தனை குண்டுகளையும் கட்டி வைத்துள்ள நிலையில், கிளைமேக்ஸ் சண்டையின் ஆரம்பத்தில் இருந்தே அவற்றை எல்லாம் ஏன் வீசி எதிரிகளை கொல்லவில்லை என்கிற கேள்விகளையும் சில நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

புரொபஸர் கண்ணாடி
மணி ஹெய்ஸ்ட்டின் ஹீரோவான புரொபஸர் கண்ணாடி எனக்கு வேண்டும், அந்த அளவுக்கு சங்கிலியால் கட்டி தலை கீழாக தொங்க விட்ட போதும் அது அவர் கண்களை விட்டு கழல வில்லையே என சில நெட்டிசன்கள் நக்கலடித்து ட்ரோல் செய்தும் வருகின்றனர். சிலர் மணி ஹெய்ஸ்ட்டா அப்படின்னா என்னப்பா? நான் பிக் பாஸ் புரமோ மட்டும் தான் பா பார்த்தேன் என்றும் கலாய்த்து வருகின்றனர்.