Don't Miss!
- Finance
ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி அடுத்த டீல்.. GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி..!
- News
யூடியூப் சேனல்களில் ஒரே அவதூறு.. கொதித்த நடிகர் சரத்குமார்..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்
- Lifestyle
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மேற்கொள்ளும் புதிய டயட் பற்றி தெரியுமா?
- Sports
அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Moon Knight Episode 4: இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா ரேஞ்சுக்கு இருக்கே!
லாஸ் ஏஞ்சல்ஸ்: லோகியை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூன் நைட் எனும் சூப்பர் ஹீரோ வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் அந்நியன் மாதிரி ஆரம்பிக்கப்பட்ட இந்த கதை தற்போது ஹீரோ மார்க்கை போலவே நம்மையும் மனநல மருத்துவமனைக்கே கொண்டு சென்று சேர்த்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.
கோன்ஷூவை சக கடவுள்கள் சிறை பிடித்து வைத்த நிலையில், மூன் நைட் ஷூட் இல்லாமல் மார்க் எப்படி இந்த எபிசோடை கடந்தார் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
Oh My Dog Review : ரசிகர்களை கவர்ந்ததா சிம்பா?...ஓ மை டாக் எப்படி இருக்கு? விமர்சனம்

மூன் நைட் வெப்சீரிஸ்
புதன்கிழமை ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மார்வெலின் புதிய வெப்தொடரான மூன் நைட் வெப்சீரிஸின் புதிய எபிசோடு வந்து விழுகிறது. ஸ்டீவ் என்பவருக்குள் மார்க் மற்றும் கோன்ஷூ என இரு கதாபாத்திரங்கள் உள்ளன. அந்நியன் படத்தை போலவே மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டரை போல மாறி மாறி பேசியும் நடித்தும் நடிகர் ஆஸ்கர் ஐசாக், ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு நடித்து அசத்துகிறார்.

4வது எபிசோடு
சில வெப்சீரிஸ்களை போல மொத்தமாக 8 முதல் 10 வெப்சீரிஸை போட்டு விடாமல் வாரம் ஒரு எபிசோடை போட்டு ஹைப்பை ஏற்றி வருகின்றனர். இந்த வாரம் 4வது எபிசோடு வெளியாகி உள்ளது. வில்லன் ஆர்தர் மற்ற கடவுள்களிடம் அழகாக பேசி கோன்ஷுவை சிறை பிடிக்க வைத்து விடுகிறார்.

சூட் இல்லை, சக்தி இல்லை
4வது எபிசோடில் ஹீரோ மார்க்கிற்கு கோன்ஷு சக்தி இல்லாததால் எந்தவொரு சக்தியும் இல்லாமல் போய் விடுகிறது. அதே நேரத்தில் மம்மி படம் போல எகிப்தில் கல்லறைகளை தோண்டி கண்டுபிடிக்கும் வேலை என்பதால், மார்க்கிற்கு பதிலாக ஸ்டீவன் தான் அதிக நேரங்களை எடுத்துக் கொள்கிறார். ஸ்டீவின் நேர்மைக்கு பரிசாக மார்க் மனைவி லைலாவிடம் இருந்து சூப்பரான லிப் லாக் கிஸ்ஸும் கிடைக்கிறது. அதே சமயம் மார்க்கிடம் இருந்து அறையும் விழுகிறது.

மனநல மருத்துவமனை
மூன் நைட் ஷூட் இல்லாமல் ஹீரோ மர்கயாவா, இந்த எபிசோட் உடன் கதை க்ளோஸா என நினைத்த நிலையில், திடீரென மனநல மருத்துவமனையில் மார்க் இருக்க, அவருக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டராக வில்லன் ஆர்த்தர் இருக்கிறார். அநேகன் படத்தை போலவே இத்தனை நாட்களாக நீங்க கண்டது எல்லாம் மனப் பிராந்தி என்பது போல அவர் பேச வெப்சீரிஸ் பார்க்கும் ரசிகர்கள் இன்னும் என்னை நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா என பஞ்ச் பேசும் அளவுக்கு இருக்கிறது.

அந்த நீர் யானை யார்
இதெல்லாம் உண்மை கிடையாது, எனக்கு நல்லா நினைவு இருக்கு, நீ என்னை சுட்ட, என அங்கிருந்து ஓடிப் போகும் மார்க்கிற்கு இன்னொரு சவப்பெட்டியில் இருந்து ஸ்டீவன் டபுள் ஆக்ஷனாக எழுந்து வருவதை பார்த்து மேலும், தலையே சுற்றுகிறது. இருவரும் இணைந்து ஓடி வர, ஒரு டோரை திறந்து கொண்டு நீர் யானை ஒன்று பெண் குரலில் பேசுவது கிளைமேக்ஸில் செம ட்விஸ்ட் கொடுக்கிறது. Taweret எனும் கிரேக்க கடவுள் தான் அந்த நீர் யானை என டீகோட் செய்துள்ளனர். அடுத்த எபிசோடு எப்படி இருக்கப் போகிறதோ என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.