Don't Miss!
- Finance
மோடி அரசு வாங்கப்போகும் ரூ.16 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்-க்கு முன்பே ரிப்போர்ட்..!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- News
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு..72 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்..ஷாக் கொடுக்கும் பின்னணி
- Automobiles
ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
தியேட்டர்.. ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸான படம் என்னென்ன?.. இன்னும் பாக்கலனா பாருங்க!
சென்னை : திரைப்பட பிரியர்களுக்கு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றாலே அதுகொண்டாட்டம் தான்.
தசராவை பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினத்தை பக்காவாக பிளான் செய்து தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என வரிசையாக படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகி உள்ள என்பதை பார்க்கலாமா?சென்னை : திரைப்பட பிரியர்களுக்கு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றாலே அதுகொண்டாட்டம் தான்.
தசராவை பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினத்தை பக்காவாக பிளான் செய்து தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என வரிசையாக படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகி உள்ள என்பதை பார்க்கலாமா?

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் வசூலை வாரிக்குவித்து இன்னும் திரையரங்கில் இப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதே நாளில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் வெளியானது.

காட்ஃபாதர்
மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் காட்ஃபாதர். மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், சமூத்திரகனி, பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோர் 5ந் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

பிஸ்தா
ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சதீஷ் சிரிஷ், யோகி பாபு, சதீஸ் ஆகியோர் நடித்த பிஸ்தா படம் அக்டோபர் 7ந் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களிடமும் பிரபலமானார்

கார்த்திகேயா 2
தெலுங்கு திரைப்படமான கார்த்திகேயா 2 ஏற்கனவே வெளிவந்து வெற்றிபெற்ற தெலுங்குப் படமான கார்த்திகேயா என்ற படத்தின் இரண்டாம் பாகம். ஒரு புராண த்ரில்லர். ZEE 5ல் ஒடிடி தளத்தில் அக்டோபர் 5ந் தேதி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பார்க்கலாம்.

ஈஷோ மலையாளம்
ஜெயசூர்யா மற்றும் நமீதா பிரமோத் நடிப்பில் நாதிர்ஷா இயக்கிய மலையாள த்ரில்லர் திரைப்படம் ஈஷோ நாட் ஃப்ரம் தி பைபிள். இத்திரைப்படர் அக்டோபர் 5ந் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளத. அருண் நாராயண் தயாரித்து சுனீஷ் வாரநாட் எழுதியுள்ளார். மலையாளத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரை தலைப்பாக வைத்திருப்பது பல விதமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

லால் சிங் சத்தா
பாலிவிட் நடிகர் அமீர்கானின் திரை லால் சிங் சத்தா வாழ்க்கையில் இதுவரை இல்லாத தோல்வியை சந்தித்தது. இப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி திரையரங்கில் வெளியானது. தியேட்டரில் வெளியான 6 மாதம் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது முன்னதாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.