For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’Mukhbir’ Web series review..ஒரு ’ரா’ உளவாளியின் கதை-தமிழில்..உளவுப்பணியில் உள்ள பிரச்சினைகள்

  |

  வெப்சீரீஸில் நாம் ரசித்து பார்க்கும் பல கிரைம், த்ரில்லர் சீரீஸ்கள் உள்ளது. அதில் பார்த்து ரசிக்கும் ஒன்றாக முக்பீர் வெப்சீரீஸ் ஜீ.தமிழில் வெளிவந்துள்ளது.

  இந்திய உளவாளியின் கதையை மையமாக கொண்ட கதைக்கரு. பாகிஸ்தானில் செயல்படும் த்ரில் அனுபவத்தை சொல்கிறது கதை.

  1965 ஆம் ஆண்டு நடக்கும் கதையில் ஆர்ட் டைரக்‌ஷன் மிக அருமையாக உள்ளது. ரா தலைமை அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

  வெப் சீரீஸ் விமர்சனம்
  நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ஜைன்கான் துரானி, பர்கா பிஸ்த், ஜோயா அஃப்ரோஸ், அர்ஸ் சாயா,
  இசை : அபிஷேக் நெய்ல்வால்
  கேமரா: திமோ போபவ்
  இயக்கம்: ஷிவம் நாயர், ஜெயபிராத் தேசாய்

  Naane Varuven Twitter Review: த்ரில்லர் படமா? பேய் படமா? தனுஷின் நானே வருவேன் எப்படி இருக்கு?Naane Varuven Twitter Review: த்ரில்லர் படமா? பேய் படமா? தனுஷின் நானே வருவேன் எப்படி இருக்கு?

   இந்தியா - பாக் போர் பின்னணியில் உளவாளி ஒரு வெப் சீரீஸ்

  இந்தியா - பாக் போர் பின்னணியில் உளவாளி ஒரு வெப் சீரீஸ்

  1964 ஆம் ஆண்டு நேருவின் மறைவு, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்ற நேரத்தில் நடந்த சர்வதேச நிகழ்வுகள், பாகிஸ்தான் செய்த சதிகளை முறியடிக்க இந்திய உளவு அமைப்பின் செயல்பாட்டை அழகாக சித்தரித்துள்ளனர். உளவாளியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வெகு அழகாக எடுத்துள்ளனர். கதை, திரைக்கதை, ஆர்ட் டைரக்‌ஷன், கேமரா என குறை சொல்லாதபடி உள்ளது. ஓடிடி தளத்தில் ஜி.5-ல் இது வெளியாகியுள்ளது.

  கதை இதுதான்

  கதை இதுதான்

  1964 ஆம் ஆண்டு நேரு மறைவுக்குப்பின் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளை பற்றிய கதை. பாகிஸ்தானுக்குள் ரா உளவாளிகள் ஊடுருவி இருக்க, இந்தியாவில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் அதே அளவு ஊடுருவி இருப்பதும், அவர்கள் ரா உளவாளிகள் பற்றி தகவல் கொடுக்க ஐ.எஸ்.ஐ தலைவர் நேரடியாக பாகிஸ்தான் பஜாரில் உள்ள பழக்கடையில் வியாபாரியாக இருக்கும் ரா உளவாளியை கொல்லுவதில் படம் ஆரம்பிக்கிறது.

   சாதாரண இளைஞரை உளவாளியாக தயார்படுத்தும் பிரகாஷ் ராஜ்

  சாதாரண இளைஞரை உளவாளியாக தயார்படுத்தும் பிரகாஷ் ராஜ்

  முக்கிய உளவாளி கொல்லப்பட்டதால் இந்தியாவில் உள்ள ரா தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. உளவுத்துறை உயர் அதிகாரிகளில் ஒருவராக வரும் பிரகாஷ் ராஜிடம் யாரையாவது தயார்படுத்தி வைத்திருப்பாயே என உளவுத்துறை தலைவர் கேட்க, ஒரு இளைஞன் துடிப்பானவன் ஒருவனை சிறு சிறு வேலைகளில் தயார் செய்துள்ளேன் எனக்கூற என்ன விளையாடுகிறாயா என்ன வேலைக்கு அனுப்பப்போகிறோம் தெரியுமா?

   புனைக்கதை மூலம் உளவாளியாக செல்லும் காட்சி

  புனைக்கதை மூலம் உளவாளியாக செல்லும் காட்சி

  பாகிஸ்தானுக்குள் உளவாளியாக போகணும். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அறிய திறமைமிக்க ஆள் தேவை என்று அதிகாரி கோபப்பட சில சின்ன வேலைகளை அந்த இளைஞன் எப்படி முடித்துக் கொடுத்தான் என்பதை காட்டி இப்போது நமக்கு வேறு வழியில்லை, அவன் வயதுக்கு ஏற்றாற்போல் ஒரு புனைக்கதையும் இருக்கு என்று கூறி சுதந்திரத்துக்கு பின் இந்தியாவிலேயே தங்கிவிட்ட ஒருகுடும்பம் தீ விபத்தில் உயிரிழக்க அவர்களது 7 வயது மகன் பிழைத்துள்ளான். அந்த ரெக்கார்டை வைத்து தற்போது 25 வயது உள்ள வாலிபன் தான் அந்த பையன் என பாகிஸ்தானில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு அனுப்ப போவதாக பிரகாஷ் ராஜ் சொல்ல உளவுத்துறை தலைவர் அதை ஏற்றுக்கொள்கிறார்.

  சாகசம் காட்டும் ஐஎஸ்ஐ தலைவர்

  சாகசம் காட்டும் ஐஎஸ்ஐ தலைவர்

  பாகிஸ்தானுக்குள் தனது சித்தப்பா குடும்பத்தாரை பார்க்கப்போகும் இளைஞர் அர்ஃபானாக நுழைகிறார் ரா உளவாளி. தரைமார்கமாக எல்லைக்குள் அவர் நுழையும்போதே மோப்பம் பிடித்து அவரை துரத்துகிறார் ஐஎஸ்ஐ உளவாளி அவரைக்கொன்று இர்ஃபானை மீட்டு சித்தப்பா வீட்டுக்கு அனுப்புகிறார் அங்கே லாரி ட்ரைவர் போல் பணியாற்றும் மற்றொரு உளவாளி. சித்தப்பா வீட்டுக்கு செல்லும் இர்ஃபான் சொல்லும் பொய்க்கதையை அவர் நம்ப தயாராக இல்லை, ஆனால் பாட்டி தன் பேரன் என நம்பி ஏற்றுக்கொள்கிறார். சித்தப்பா போலீஸுக்கு புகார் அளிக்க போலீஸார் இர்ஃபானை தூக்கிச் செல்ல அங்கு வரும் ஐ.எஸ்.ஐ தலைவர் கடுமையாக விசாரிக்க எதுவும் கிடைக்காததால் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அர்ஃபான் மீது பாக் உளவுத்துறை அதிகாரி சந்தேகத்திலேயே இருக்கிறார்.

   சித்தப்பா..சித்தப்பா..என்ன நடிப்பப்பா

  சித்தப்பா..சித்தப்பா..என்ன நடிப்பப்பா

  பின்னர் சித்தப்பா வீட்டில் தங்கும் ஹர்ஃபான் அங்குள்ள உளவாளியுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ் சொன்னப்படி இயங்குகிறார். பாகிஸ்தான் மிலிட்டரி பிரிகேடியர் ஹபீபுல்லா போதை மருந்து கடத்துகிறார். அவருடன் இணைந்து உதவுவதுபோல் நடித்து உள்ளே நுழைகிறார் ஹர்ஃபான், பாக் ஜெனரல் ஹைதி ஜனாதிபதியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். அதே நேரம் இந்தியாவை வீழ்த்தி ஜம்மு காஷ்மீரை பிடிக்க துடிக்கிறார். ஜெனரல் ஹைதியின் காதலி பாடகியின் நட்பை பெறுகிறார், ஹர்ஃபான். இதனிடையே பாக் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ தலைவர் ஹர்ஃபானை மோப்பம் பிடித்து விடுகிறார்.

  மீதிக்கதை இதுதான்

  மீதிக்கதை இதுதான்

  பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கும் சதி முறியடிக்கப்பட்டதா? இர்ஃபான் சிக்கினாரா? தப்பித்து இந்தியா வந்தாரா? என்பதே மீதிக்கதை. காட்சிக்கு காட்சி நம்மை பரபரப்பில் ஆழ்த்துகின்றனர்.1965 ஆம் ஆண்டு நிஜ போர் சம்பவத்துடன் இணைந்த கதை என்பதால் அது நம்மை பெரிதும் கவர்கிறது.

  பிளஸ்

  பிளஸ்

  பிளஸ் என்று பார்த்தால் நம்முடைய சினிமா இயக்குநர்கள், கதாசிரியர்கள் ஒரு படத்தை எப்படி எடுக்கவேண்டும், ப்ரோட்டா கால் என்ன என்பதை இவர்களைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஹோம்வர்க் செய்து படத்தின் திரைக்கதை காட்சிகளை அமைத்துள்ளார்கள். முக்கியமாக பாராட்ட வேண்டிய விஷயம் கதை 1965 ஆம் ஆண்டு நடப்பதால் அந்தக்காலத்து டெல்லி, அலுவலகங்கள், உடைகள், கார் வாகனங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் ஆர்ட் டைரக்டர்.

   தமிழ் படத்தில் ரா உளவாளியாக படம் எடுத்து செய்த காமெடித்தனங்கள்

  தமிழ் படத்தில் ரா உளவாளியாக படம் எடுத்து செய்த காமெடித்தனங்கள்

  நமது தமிழ் படம் ஒன்றில் உச்ச நடிகர் ஒருவர் ரா உளவாளியாக வருவார் பார்ப்பவர்களிடம் எல்லாம் நான் ரா உளவாளிங்க என தன் பதவியை ஏலம் விடுவார், ஆனால் ப்ரோடோகால் என்னவென்றால் உயிரே போனாலும் அவர்களை அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். சிலர் இந்திய சிறைக்குள் கூட அடைக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. படத்தில் காஷ்மீர் எல்லையில் இந்திய உளவாளியை முஜாகிதீன்களுடன் இந்திய ராணுவம் பிடித்துவிடும். தன்னுடைய மேலதிகாரி பிரகாஷ் ராஜ் தனி எண்ணை கொடுத்து பேசுங்கள் என சொல்வார் இர்ஃபான்.

   தமிழ் இயக்குநர்களே கவனியுங்கள் இவர்களது ஹோம் வர்க்கை

  தமிழ் இயக்குநர்களே கவனியுங்கள் இவர்களது ஹோம் வர்க்கை

  போனை எடுத்த பிரகாஷ் ராஜ் எனக்கு யாரையும் தெரியாது என ராணுவ உயர் அதிகாரியிடம் சொல்லிவிடுவார். அதன் பின் அர்ஃபானுக்கு விழும் அடி சொல்லி மாளாது. ஆனால் மறுநாள் போக வேண்டிய இடத்திலிருந்து உத்தரவு போகும் அர்ஃபான் இந்தியாவுக்கு வேலை செய்பவர் என தெரிவிக்கப்படும். பிரகாஷ்ராஜிடம் அர்ஃபான் நான் அங்கு அடி உதை வாங்கி கதறுகிறேன் நம்ம மிலிட்டரி தானே யாரென்று சொன்னால் இந்த அளவு தாக்கியிருப்பார்களா என்று கேட்பார். ஆப்டி எல்லாம் சொல்ல முடியாது, ப்ரோட்டோகால் என பிரகாஷ் ராஜ் சொல்வார். அதை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

   உயிரிழக்கும் முன் தந்தைக்கு கடிதம் அனுப்பும் உளவாளி

  உயிரிழக்கும் முன் தந்தைக்கு கடிதம் அனுப்பும் உளவாளி

  பெண்களிடம் அர்ஃபான் பழகி சோர்ஸ் எடுப்பதும், அழகான காஷ்மீர், பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் மூளைச்சலவை செய்வது, இந்தியா மீதுள்ள அவர்களின் வெறுப்பு, அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் உள்ள பதவி வேட்டை, மிலிட்டரி அதிகாரிகள் லஞ்ச, ஊழல், பெண் விவகாரம் என அனைத்தையும் அழகாக காட்டியிருப்பார்கள். இதனால் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி பின்னர் ரா உளவாளியாக பாகிஸ்தானில் வேலை செய்வதும், அர்ஃபானை காப்பாற்ற, இந்திய ஆவணங்களை அழிக்க அவர் உயிரை பணயம் வைப்பதும், அவரது தந்தைக்கு கொடுக்கும் கடைசி கடிதமும் நெஞ்சை உருக்கும் காட்சி

  மைனஸ்

  மைனஸ்

  சாதாரண இளைஞன் அவன் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவனை ரா உளவாளியாக மாற்றி அனுப்புவார்களா? பாகிஸ்தான் உளவு அமைப்பு மோப்பம் பிடித்தும் அசட்டையாக இருப்பதும், ஜெனரலின் காதலியை தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு ஜெனரல் வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக அர்ஃபான் நுழையும் காட்சிகள் அனைத்தும் சினிமாடிக்காக உள்ளது. சாதாரணமாக உளவு அமைப்பு அதிகாரி பெண்களிடம் பழகுவது, உடனடியாக மிலிட்டரி உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் காட்சிகள் நெருடுகிறது. இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளி பற்றி கண்டுபிடித்த ரா அதிகாரி அதன் பின்னர் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருப்பதும் படத்தின் மைனஸ்.

   ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டு -அசத்தும் ரா அதிகாரி பிரகாஷ் ராஜ்

  ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டு -அசத்தும் ரா அதிகாரி பிரகாஷ் ராஜ்

  மொத்தத்தில் இந்த வெப் சீரீஸ் ஃபேமிலிமேன், ஆபரேஷன் ஓபிஎஸ் வரிசையில் ரா உளவாளிகள் வாழ்க்கையை உண்மைச் சம்பவத்துடன் மையப்படுத்தி அழகாக 6,7 எபிசோடுகளில் எடுத்து முடித்துள்ளனர். அந்த காலத்தை கண் முன் கொண்டுவரும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து செய்துள்ளது மிகவும் பாரட்டப்படவேண்டிய ஒன்று. வடநாட்டு ஊடகங்கள் 7.5 ஸ்டார்களுக்கு மேல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அவருக்கே உரிய நடிப்பால் அசத்துகிறார். இந்த வெப் சீரீஸ் ஓடிடி தளத்தில் ஜி.5-ல் இது வெளியாகியுள்ளது.

  English summary
  Web series have many crime and thriller series that we enjoy watching. Among them, Mukhbir's web series is released in Tamil. The plot revolves around the story of an Indian spy. The story tells the thrilling experience of working in Pakistan. Set in 1965, the art direction is superb. Prakash Raj has played the role of Raw Chief.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X