twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்குறதுக்கு பன்னி மாதிரி இருப்பான்.. மணிரத்னம் எப்படி சம்மதித்தார்? நவரசா சர்ச்சைகள் !

    |

    சென்னை: Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, "நவரசா" ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சுவை என்ற அடிப்படையில் நாம் பார்த்து ரசிக்க மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர் .

    அதில் குறிப்பாக சம்மர் ஆஃப் 92 என்ற இந்த படைப்பில் yg மகேந்திரன் பேசும் வசனம் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பாக யோகிபாபு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாஸ்டர் ..... பார்த்து, "பாக்குறதுக்கு பண்ணி மாதிரிதான் இருப்பான் ஆனா அவன் நாய் தான்" என்று சொல்லும் அந்த வசனம் மிகவும் அழுத்தமானதாகவும் குறிப்பாக ஜாதி ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

    சந்தானத்தின் டிக்கிலோனா ஓடிடியில் வெளியாகிறது... ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட் !சந்தானத்தின் டிக்கிலோனா ஓடிடியில் வெளியாகிறது... ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட் !

    அதுவும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் yg மகேந்திரன் பேசும்பொழுது அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட ஒரு ஜாதியை மிகவும் மட்டமாக இழிவுபடுத்தி கேவலமாக பேசுவதாக பலரும் சொல்லி வருகின்றனர் .

    கேள்வி எழுந்துள்ளது

    கேள்வி எழுந்துள்ளது

    அதுவும் ஒரு மனிதனை விலங்குகளோடு ஒப்பிட்டு தரைகுறைவாக அவமானப் படுத்தி பேசுவது பிரியதர்ஷன் போன்ற இயக்குனர்கள் படைப்பில் வரலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படைப்புக்கு முழு அங்கீகாரம் கொடுத்த மாபெரும் இயக்குனர் மணிரத்தினம் மீது நிறைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    பிரதானமான மையப்புள்ளி

    பிரதானமான மையப்புள்ளி

    தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே ஜாதி ரீதியாக பேசும் வசனங்களை சென்சார் போர்டு ட்ரிம் செய்து வருகிறது. விலங்குகளுக்கு பாதுகாப்பு என்று அதற்கு தனியாக ஒரு சென்சார் போர்டு குழு அமைத்து உள்ளது. இப்படி இருந்தும் இந்தப்படத்தில் ஒரு நாய் தான் பிரதானமான மையப்புள்ளி என்று வந்தபிறகு திரைக்கதையில் ஒரு நாயை வைத்து பல வசனங்கள் எழுதப்பட்டது அதை நகைச்சுவையாக மாற்றப்பட்டது எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் தன் மகளுக்காக மாப்பிள்ளை பார்க்கும் காட்சியில் புரோக்கர் குறிப்பாக பிராமின் பிராமின் என்று பலமுறை சொல்லி ஜாதியை கோடிட்டு நிரப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட ஜாதியை

    குறிப்பிட்ட ஜாதியை

    அப்படிப்பட்ட அந்த வசனத்தில் பிராமின் என்ற வார்த்தைக்கு பிறகு வரும் காட்சிகள் வசனங்கள் எல்லாமே ஒவ்வொரு ஜாதியை வெவ்வேறு விதமாக சிந்திக்கும் இன்னொரு ஜாதியை சேர்ந்த மனோநிலை என்பதை மிகவும் தெளிவாக எடுத்துள்ளார்கள் . மனிதனை மனிதன் அவமானப்படுத்துவது அசிங்கமாக பேசுவது சாதியோடு ஒப்பிடுவது , பாடி ஷேமிங் செய்வது முகத்தை மிருகங்களோடு ஒப்பிடுவது மிருகத்தை சாதியோடு ஒப்பிடுவது , ஒரு குறிப்பிட்ட ஜாதியை மிருகத்தோடு கம்பேர் செய்வது என்று காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் ரசிக்கும்படியாக இல்லை என்று பல சினிமா வல்லுனர்கள் இந்த படத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளனர்.

    கோவம் வர மாதிரி

    கோவம் வர மாதிரி

    ப்ரியதர்ஷன் இயக்கிய சம்மர் அப் 92 என்ற இந்த படம் நகைச்சுவை என்ற ரசத்தை கொண்டது .யோகி பாபு ,நெடுமுடி வேணு,ரம்யா நம்பீசன் ,போன்ற பலரும் நடித்துள்ளனர்.நகைச்சுவையை கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் .ஆனால் அவை அனைத்தும் வீணாகிவிட்டது என்று பலரும் வெவேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ."கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத" என்று சந்தானம் சொல்லும் வசனம் தான் அனைவர்க்கும் நினைவுக்கு வருகிறது .மேலும் அப்படத்தில் Y.G மஹேந்திரன் பேசிய வசனங்கள் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் Y.G மஹேந்திரன் ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல் அவர் இந்த சமுதாயத்தில் பல முறை பேசிய சர்ச்சையான விஷங்களை இந்த படத்தோடு ஒப்பிட்டு பல மீம்ஸ் போட்டு கொண்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ் .

    படைப்பு சுதந்திரம்

    படைப்பு சுதந்திரம்

    ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் , இயக்குனரின் படைப்புத்திறன், கலையார்வம் கொண்ட சினிமா கலைஞர்களின் சுதந்திரம், என்று பட்டியலிட்டுக் கொண்டு பலவிதமான கருத்துக்களை முன்வைத்தாலும் சினிமாவில் ஜாதி ரீதியான வசனங்களை பேசும்பொழுது அது எப்படிப்பட்ட படைப்பாளியாக இருந்தாலும் சர்ச்சைகள் எழத்தான் செய்கிறது .

    கேள்வி என்ற ஒன்று

    கேள்வி என்ற ஒன்று

    சின்ன படம் பெரிய படம் என்று பாராமல் புது இயக்குனர் பெரிய இயக்குனர் என்று யோசிக்காமல் ஜாதி என்று வந்துவிட்டால் கேள்வி என்ற ஒன்று வந்தே தான் தீருகிறது .இந்த கேள்விகளுக்கு மணிரத்னம் பதில் அளிப்பாரா? பிரியதர்ஷன் பதில் அளிப்பாரா ? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

    சீரியஸாக

    சீரியஸாக

    பல மேடைகளில் யோகி பாபு தன்னை "பன்னி மூஞ்சி வாயா" என்று எத்தனை பேர் சொன்னாலும் அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்று பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு உருவ ரீதியான கிண்டலுக்கு ஒரு கூட்டம் இருக்க ஜாதி ரீதியான வசனங்களை கண்டிக்கவும் கேள்வி கேட்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

    விடை கிடைக்குமா

    விடை கிடைக்குமா

    மனோரீதியாக பாதிக்கப்பட்ட சமூகம்தான் மனநிலை பாதிக்கப்பட்ட வசனங்களை சில சமயம் வெளிப்படுத்துகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த எல்லா கேள்விகளுக்கும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இயக்குனர் தரப்பிலிருந்து விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . சாதிரீதியான தமிழ் படங்கள் சமீபகாலமாக நிறைய வந்து கொண்டே தான் இருக்கிறது அப்படிப்பட்ட படங்கள் மிக அதிகமான சர்ச்சையும் நிறைய கேள்விகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மணிரத்னம் தயாரிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இப்படி ஜாதி ரீதியான வசனங்கள் வந்தது ரொம்பவே ஆச்சிரியம் என்று பலரும் கூறி வருகின்றனர் .

    English summary
    Navarasa anthology movie was released in OTT yestereday. One of the episodes in the movie has created some ruckus among the fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X