”நான் சினிமா ஸ்டார்லாம் இல்லை, சாதாரண பொண்ணு தான்”” வெளியானது நயன்தாரா பயோ பிக் ப்ரோமோ

சென்னை: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அது நயன்தாரா திருமண வீடியோ இல்லையென இயக்குநர் கவுதம் மேனன் விளக்கம் கூறியிருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கைப் பயணம்

லேடி சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கைப் பயணம்

சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் நயன். இதனையடுத்து ஹனிமூன் கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர் நயன் - விக்கி தம்பதியினர். இதனிடையே நயன்தாராவின் வாழ்க்கைப் பயணம் சைலண்டாக ஆவணப் படமாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள பயோ பிக்

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள பயோ பிக்

நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள காட்ஃபாதர், மலையாளத்தில் கோல்ட் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஜூன் 9ம் தேதி நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் அது திருமண வீடியோ இல்லை, நயன்தாராவின் பயோபிக் என தற்போது தெரியவந்துள்ளது.

ப்ரோமோவை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

ப்ரோமோவை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்த திருமண நிகழ்வுகளை கெளதம் மேனன் இயக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் விளக்கம் தெரிவித்திருந்த கெளதம் மேனன் "நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிகளை நான் இயக்கவில்லை. அவரது சிறுவயதில் கடந்து வந்த முக்கியமான தருணங்களை ஆவணப் படமாக இயக்கியுள்ளேன்" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த ஆவணப் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விரைவில் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ்

விரைவில் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு 'Nayanthara Beyond The Fairytale' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவின் சிறுவயது புகைப்படங்களுடன் அவரது திருமண போட்டோக்கள், வீடியோக்களும் இடம்பெற்றுள்ளது, அதேபோல் விக்னேஷ் சிவனும் நயன்தாரா குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதனிடையே தற்போது வெளியான ப்ரோமோ, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், "நான் சினிமாவுக்கான குழந்தை இல்லை, நானும் சாதாரணமான பொண்ணு தான்" என நயன் பேசியுள்ளது, அவரது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X