Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் O2...நயன் – விக்கியின் திருமண பரிசாக அமையுமா?
சென்னை : நயன்தாரா நடித்த நெற்றிக்கண படத்தை தொடர்ந்து ஓ2 படமும் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எப்போது, எந்த தளத்தில் இந்த படம் ரிலீசாகிறது என்பது பற்றிய விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ஜி.கே.விக்னேஷ் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் ஓ2. எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் 8 வயது சிறுவனின் தாயாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. டைரக்டர் விக்னேஷ், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மாங்கல்ய தோஷம்.. நயன்தாரா கோவில் கோவிலாக போக இதுதான் காரணம்?

இது தான் படத்தின் கதையா
ஒரு பஸ் எதிர்பாராத விதமாக பூமிக்கு அடியில் மாட்டிக் கொள்கிறது. அந்த பஸ்சில் இருக்கும் பயணிகளில் நயன்தாராவும், வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி அந்த பஸ்சில் இருந்து மீண்டு வெளியே வருகிறார்கள் என்பது தான் படத்தின் கதையாம். இதை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார்கள்.

யாரெல்லாம் நடிச்சிருக்காங்க
த்ரில்லர் கதையான இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் ரித்வித், இந்த படத்தில் நயன்தாராவின் மகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்என்ஆர் மனோகர், லீனா, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

எந்த தளத்தில், எப்போ ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஓ2 படம் ஜுன் 17 ம் தேதி அதிகாலை 12 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

நயனின் திருமண பரிசாகுமா ஓ2
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு ரிலீசாக போகும் நயன்தாராவின் முதல் படம் இது. அதனால் இது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண பரிசாக நிச்சயம் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 வயது மகனுக்கு தாயாக நயன்தாரா
ஓ2 படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் தான் நயன்தாரா நடித்துள்ளார். இவரது மகனாக நடிக்கும் ரித்விக் யூட்யூப் வீடியோக்களால் பிரபலமானவர். ஓ2 படத்தின் டிரைலரில் நயன்தாரா பேசி இருக்கும், எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துட்டு சும்மா இருக்கமாட்டா என்ற வசனம் டிரைலருக்கு மட்டுமல்ல படத்திற்கே ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

டிரைலரே கலக்கலா இருந்ததே
ஓ2 படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் தான் நயன்தாரா நடித்துள்ளார். இவரது மகனாக நடிக்கும் ரித்விக் யூட்யூப் வீடியோக்களால் பிரபலமானவர். ஓ2 படத்தின் டிரைலரில் நயன்தாரா பேசி இருக்கும், எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துட்டு சும்மா இருக்கமாட்டா என்ற வசனம் டிரைலருக்கு மட்டுமல்ல படத்திற்கே ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.