ஓடிடியில் இருந்து தூக்கப்பட்ட குட் பேட் அக்லி.. இளையராஜா சம்பவம்.. அஜித் ரசிகர்கள் கடும் அப்செட்!
சென்னை: இனிமேல் இளையராஜா பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு முன் இயக்குநர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை சிந்தித்து தான் ஆக வேண்டும். மஞ்சுமெல் பாய்ஸ், லோகா என மலையாள படங்கள் தொடங்கி குட் பேட் அக்லி, கூலி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை மீண்டும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தியே சமீப காலமாக கல்லா கட்டி வருகின்றன.
புதிய இசையமைப்பாளர்கள் ஹீரோக்களுக்கு பில்டப் பிஜிஎம் போடுவதற்கு தான் லாயக்கு என்றும் இளையராஜா பாடல்கள் இன்றும் படத்தை எலிவேட் செய்து வருகின்றன. அவர் கேட்கும் குறைந்த பட்ச மரியாதையை கூட கொடுக்காமல் ஒரு படக்குழு ஏன் அவர் பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்விகளும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிக வசூல்: இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் ரஜினிகாந்த் கூலி படம் கூட தமிழ்நாட்டில் பெரிய தொகையை வசூல் செய்யவில்லை என்றும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ்நாட்டில் மட்டும் நடத்தியது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதிகபட்சமாக குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 200 கோடி வசூல் என போஸ்டர் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் மிகப்பெரிய தொகைக்கு அஜித் குமாரின் குட் பேட் அக்லி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கம்: இளையராஜா கடைசியாக அவமதிப்பு வழக்கை அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக வீசிய நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படத்தையே அந்த ஓடிடி நிறுவனம் நீக்கியுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக நயன்தாராவின் அன்னபூரணி படம் சர்ச்சைகள் காரணமாக ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுக்கு வெற்றி: இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி, ஒத்த ரூபாய் தாரேன் என 3 இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் வைத்து கல்லா கட்டினார். தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கியே இந்த பாடல்களை வைத்ததாக கோர்ட்டில் கூறிய நிலையில், எந்த தயாரிப்பாளர்கள் என்பதை குறிப்பிடவே இல்லை என்கிற வாதத்தை முன்வைத்த இளையராஜா தரப்புக்கு வெற்றி கிடைத்திருப்பதாக கூறுகின்றனர்.
மிகப்பெரிய நஷ்டம்: குட் பேட் அக்லி திரைப்படத்துக்காக அஜித் குமாருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், படத்தின் பட்ஜெட் அளவுக்கு வசூல் வரவில்லை என்கின்றனர். சாட்டிலைட் உரிமையே பஞ்சாயத்தில் உள்ள நிலையில், தற்போது ஓடிடி உரிமத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளருக்கு குட் பேட் அக்லி லாபத்தை கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் மிகப்பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மீண்டும் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணையும் படத்திலாவது இளையராஜா பாடலை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











