twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்… அடுத்த ரவுண்டுக்கு ரெடியா?

    |

    ஸ்பெயின்: கொரோனா ஊரடங்கு நேரத்தில் உலகம் முழுவதும் பிரபலமான வெப் சீரிஸ் என்றால் அது மணி ஹெய்ஸ்ட் தான்.

    நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த வெப் சீரிஸிக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    கடந்தாண்டு டிசம்பரில் மணி ஹெய்ஸ்ட் தொடரின் இறுதி எபிசோட் வெளியான நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று

    வெளியாகியுள்ளது.

    மணி சார் என் மேல நம்பிக்கை வெச்சதற்கு நன்றி.. குயிலாக கூவிய குயிலி! மணி சார் என் மேல நம்பிக்கை வெச்சதற்கு நன்றி.. குயிலாக கூவிய குயிலி!

    ஓடிடி ரசிகர்களை ஆக்கிரமித்த மணி ஹெய்ஸ்ட்

    ஓடிடி ரசிகர்களை ஆக்கிரமித்த மணி ஹெய்ஸ்ட்

    ஸ்பெயினில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பான 'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸ், அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெப் சீரிஸ்ஸாக வெளியானது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் மிகவும் வரவேற்பை பெற்ற இந்த வெப் சீரிஸ், ஐந்து சீசன்களுடன் மொத்தம் 41 எபிசோட்களாக வெளியானது. 2019ல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது தான் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் ரசிகர்களிடம் அதிக வைரலானது.

    அரசுக்கு எதிரான யுத்தம்

    அரசுக்கு எதிரான யுத்தம்

    அரசு அதிகாரங்களுக்கு எதிராக, அதன் முக்கிய வங்கி, வருவாய் நிறுவனங்களில் கொள்ளையக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவாகியிருந்தது. அரச அடக்குமுறைக்கு எதிரான கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டுசேர்க்கும் புரட்சிகரமான வெப் சீரிஸ்ஸாக இது ஹிட் அடித்தது. காதல், ஆக்‌ஷன், எமோஷனல், செண்டிமெண்ட் என பக்கா கமர்சியலாக வெளியான இந்தத் தொடர் பெரிய வெற்றிப் பெற்றது.

    கலக்கிய புரபோஸர்

    கலக்கிய புரபோஸர்

    இந்தத் தொடரின் புரபோஸர் கேரக்டரில் நடித்த Álvaro Morte-வுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதேபோல், பெர்லின், டோக்கியோ, நைரோபி உள்ளிட்ட பாத்திரங்களும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டன. சோஷியல் மீடியாக்களில் இந்த பாத்திரங்களின் பெயர்களில் லட்சக்கணக்கான கணக்குகள் உள்ளன. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் இந்தத் தொடர் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளது. இதனால், இந்தத் தொடர் கொரிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு, அங்கேயும் சூப்பர் ஹிட் அடித்தது.

    பெர்லின் மணி ஹெய்ஸ்ட்

    பெர்லின் மணி ஹெய்ஸ்ட்

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் சீசனின் கடைசி எபிஸோட் வெளியான நிலையில், தற்போது, நெட்பிளிக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. தொடரின் முக்கிய பாத்திரமான 'பெர்லின்'-ஐ மட்டும் பின்னணியாக வைத்து புதிய தொடர் ஒன்றை தயாரித்து வருகிறது. Money Heist Berlin என்ற டைட்டிலில் உருவாகும் இந்தத் தொடரின் டீசரையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மணி ஹெய்ஸ்ட் கதையில் நிகழும் கொள்ளைக்கு மூளையாக இருக்கும் பெர்லின் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

    இது முந்தைய பாகம்

    இது முந்தைய பாகம்

    மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடக்கும் கொள்ளைகளை பெர்லின் ஏன் திட்டமிடுகிறார் என்ற காரணம், அவருக்கும் புரோபோஸருக்கும் இடையிலான தொடர்பு, பெர்லினின் இளமை கால வாழ்வு ஆகியவை குறித்தும் இந்தத் தொடரில் கூறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த டீசரில், பெர்லின் தொடரில் நடிக்கும் கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பெர்லின் வெப் சீரிஸ், அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

    பெர்லின் தொடர் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மணி ஹெய்ஸ்ட் ஆறாம் சீசன் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.

    English summary
    The most loved character of the Money Heist web series... Berlin is here for ruling. Netflix has released a new update for the Money Heist web series. Netflix has unveiled a new trailer for its Money Heist Berlin spin-off series. After the success of the original Money Heist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X