twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீரென 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ்...இது தான் காரணமா ?

    |

    லாஸ் கேடோஸ் : கடந்த மூன்று மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. இதற்கு நெட்ஃபிளிக்ஸ் பல காரணங்களை கூறி வருகிறது.

    முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவையை வழங்கி வரும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை அதிகமான சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது இதுவே முதல் முறையாகும். நேற்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட காலாண்டு வருவாய் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!

    2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் காலி

    2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் காலி

    2022 ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் நெட்ஃபிளிக்சின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. திடீரென 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்ததற்கு என்ன காரணம் என்பதையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    நெட்ஃபிளிக்ஸ் சொல்லும் காரணம்

    நெட்ஃபிளிக்ஸ் சொல்லும் காரணம்

    அதில் உக்ரைன் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் நெட்ஃபிளிக்ஸ் சேவை நிறுத்தப்பட்டது தான் சப்ஸ்கிரைப்பர்களை இழந்ததற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. சுமார் 222 மில்லியன் குடும்பத்தினர்கள் தங்களின் நெட்ஃபிளிக்ஸ் கணக்குகளை, ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாத மற்றும் வீட்டில் ஆள் இல்லாத 100 மில்லியனுக்கும் அதிகமானவர்களுடன் பகிர்ந்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸின் வருவாய் 2021 ம் ஆண்டில் மிகவும் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    இப்படி பண்ணினா எப்படி

    இப்படி பண்ணினா எப்படி

    கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி.,யில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அதே சமயம், பலர் தாங்கள் பணம் கட்டி பெற்ற சேவை கணக்கை தனத நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரே கணக்கை பலர் பயன்படுத்துவதால் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் கூறி உள்ளது.

    போட்டி அதிகமாகிடுச்சு

    போட்டி அதிகமாகிடுச்சு

    சமீப காலமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களுடன் போட்டி அதிகரித்திருப்பதும் தங்களின் சப்ஸ்கிரைபர்கள் திடீரென குறைந்ததற்கு காரணம் என்றும் நெட்ஃபிளிக்ஸ் கூறி உள்ளது. ஒரே கணக்கை பலர் பயன்படுத்துவதால் டிவி மற்றும் சினிமாக்களில் முதலீடு செய்யும் தங்களின் முதலீட்டாளர்களை கடுமையாக பாதிப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பிரச்சனையே வேற

    இந்தியாவில் பிரச்சனையே வேற

    ஆனால் இந்தியாவில் மற்ற ஓடிடி தளங்களுடன் ஒப்பிடுகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் கட்டணம் அதிகம் என சப்ஸ்கிரைபர்கள் பலர் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் பலரும் தங்களின் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிபினை பாதியிலேயே நிறுத்தி விட்டு, மற்ற ஓடிடி தளங்களை நாட துவங்கி உள்ளனர். நெட்ஃபிளிக்ஸின் இந்த திடீர் சரிவிற்கு இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

    English summary
    Netflix lost 2 million subscribers in the final quarter of last year. In the first quarter of the year, with 221.6 million subscribers. The fact that nearly 222 million households paying for its service have shared accounts with more than 100 million other households not paying for the TV streaming service was the main reason for the slowdown in growth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X