OG OTT: தியேட்டரில் வசூலை அள்ளிய ‘ஓஜி‘.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: பவன் கல்யாண் முன்னணி கேரக்டரில் நடித்த ஓ.ஜி. திரைப்படம்கடந்த மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஷ்ரியா ரெட்டி, இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், சவுரவ் லோகேஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். உலக அளவில் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பவன் கல்யாண், இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜப்பானில் மிகப்பெரிய போர்வீரனின் மகனான பவன் கல்யாண், அனைத்து தற்காப்பு கலைகளையும் கற்றவராக உள்ளார். மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் இருந்து தப்பிக்கும் பவன் கல்யாண், ஜப்பானை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வருகிறார். அப்போது கப்பலில் பிரகாஷ்ராஜ் அறிமுகம் கிடைக்க, அவர் பவன் கல்யாணுக்கு அடைக்கலம் தருவதுடன், பிள்ளை போல வளர்க்கிறார். தனது மறைமுக வேலைகளுக்கும் பயன்படுத்தி கொள்கிறார். பிரகாஷ்ராஜின் குடும்பத்தின் பாதுகாவலராகவே மாறும் பவன் கல்யாண், ஒருகட்டத்தில் கேங்ஸ்டர் தொழிலை விட்டு, பிரியங்கா மோகனை திருமணம் செய்து திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் பிரகாஷ்ராஜூக்கு சொந்தமான துறைமுகத்தில் வெடிபொருட்கள் வருகின்றன. அந்த வெடி பொருட்களை பிரகாஷ்ராஜின் மகன் தடுக்க முயற்சி செய்யும் போது, அவன் சிலரால் கொலை செய்யப்படுகிறான். இதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கூட்டம் இருப்பது தெரியவருகிறது. இது பிரகாஷ் ராஜின் குடும்பத்தை மட்டுமில்லாமல், பவன் கல்யாணின் குடும்பத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து மீண்டும் களத்தில் குதிக்கும் பவன் கல்யாண், வெடிபொருட்கள் பின்னணியில் உள்ள மாபியா கும்பல் யார்? அவரை பவன் கல்யாண் எப்படி எதிர்த்தார் என்பது தான் ஓஜி திரைப்படத்தின் கதை.
அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கும் பவன் கல்யாண், ஆக்ஷன் காட்சிகளில் வெறியாட்டம் ஆடுகிறார். பிரகாஷ் ராஜின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. அர்ஜுன் தாஸ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். இத்திரைப்படம் உலக அளவில் 300 கோடியை வசூலித்துள்ள இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 23 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











