Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
OTT Exclusive: சுழல் முதல் வதந்தி வரை... 2022ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய தமிழ் வெப் சீரிஸ்கள்!
சென்னை: 2022ம் ஆண்டு சில முக்கியமான தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.
அதேபோல், தமிழில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் சில வெப் சீரிஸ்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இதில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற சிறந்த தமிழ் வெப் சீரிஸ்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
திரையரங்குகளில் 25 நாட்கள் சக்சஸ்... அமேசானில் சமந்தாவின் யசோதா: ஓடிடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

தமிழில் வெளியான வெப் சீரிஸ்கள்
ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் தற்போது வெப் சீரிஸ்கள் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்தாண்டை விடவும் இந்த வருடம் சில முக்கியமான வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. சுழல், விலங்கு, தமிழ் ராக்கர்ஸ், இறை, பேப்பர் ராக்கெட், பேட்டைக்காளி, வதந்தி, ஆனந்தம், ஃபிங்கர் டிப் சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான இந்த வெப் சீரிஸ்களில் பெரும்பாலானவை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் சுழல்
2022ம் ஆண்டில் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் சுழல் முதலிடம் பிடித்துள்ளது. புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் பிரம்மா, அனுச்சரன் முருகைய்யன் இணைந்து இயக்கிய இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியானது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகியிருந்த இந்த சீரிஸில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் ஸ்ரேயா ரெட்டி என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். மேக்கிங், திரைக்கதை என பலவிதங்களிலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. காணாமல் போகும் இளம் காதல் ஜோடி என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த வெப் சீரிஸ்ஸின் ஒன்லைன். மயானக் கொள்ளை, மலைப் பிரதேசம் என விஷுவல் ட்ரீட்டாக அமைந்த இந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் முதலிடம் கொடுத்துள்ளனர்.

அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ்
இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் இடம்பெற்றுள்ளது. திரையுலகையே அச்சுறுத்தி வரும் பைரசி பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவானது. அருண் விஜய், வாணி போஜன் நடித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ்ஸை அறிவழகன் இயக்கியிருந்தார். சோனி ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ், இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் வெளியானது. புதிய திரைப்படங்கள் எப்படி இணையதளங்களில் வெளியாகிறது என்பதை மிக நுட்பமாக இயக்கியிருந்தார் அறிவழகன். அருண் விஜய் வழக்கம் போல துப்பறியும் போலீஸ் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

எஸ்ஜே சூர்யா நடிப்பில் வதந்தி
டிசம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சுழல் வெப் சீரிஸ்ஸை தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணை, இந்த தொடரையும் தயாரித்துள்ளது. ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள வதந்தி வெப் சீரிஸில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த சீரிஸும் க்ரைம் திரில்லர் ஜானரில், காணாமல் போன இளம் பெண்ணை கண்டுபிடிப்பதாக உருவாகியிருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள வதந்தி வெப் சீரிஸ், தொடர்ந்து அமேசானில் பட்டையைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

விமல் நடிப்பில் விலங்கு
யாரும் எதிர்பார்க்காத வகையில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான 'விலங்கு' வெப் சீரிஸ் சூப்பர் ஹிட் அடித்தது. விமல், முனிஸ்காந்த், பால சரவணன், இனியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரிஸை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். காமெடி ப்ளஸ் க்ரைம் திரில்லராக ஜீ5 ஓடிடியில் வெளியான விலங்கு வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் அடிப்படையில் விலங்கு வெப் சீரிஸ் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. முக்கியமாக இந்த சீரிஸில் இடம்பெற்ற 'கிச்சானாலே இழிச்சவாயன் தானே" என்ற வசனம், மீம்ஸ் கண்டெண்ட்டாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

5வது இடத்தில் இறை
அதேபோல், சரத்குமார் நடிப்பில் வெளியான 'இறை' வெப் சீரிஸ் இந்த வரிசையில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜேஷ் எம் செல்வா இயக்கிய இறை, ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியானது. இந்த வெப் சீரிஸும் க்ரைம் ப்ளஸ் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட், பிரசன்னா, ரெஜினா, அபர்ணா பலாமுரளி உள்ளிட்டோர் நடித்த ஃபிங்கர்டிப் சீசன் 2, வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி ஆகிய வெப் சீரிஸ்களும் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.