twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25 வருடம்.. டிவிடி கடையில ஆரம்பிச்சு.. இன்னைக்கு உலக ரசிகர்களை ஓடிடியில் மூழ்கடித்த Netflix!

    |

    சென்னை: உலகளவில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தனது 25வது ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறது.

    டிவிடியாக ஆரம்பமான வரலாறு முதல் மணி ஹெயிஸ்ட், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், ஸ்குவிட் கேம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் மூலமாக உலக ரசிகர்களை எப்படி கவர்ந்தோம் என்கிற வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    மேலும், தங்களது சந்தாதாரர்களுக்காக இந்த ஆண்டு தி கிரேமேன் உள்ளிட்ட பல புதிய படங்களையும் செக்ஸ் எஜுகேஷன் உள்ளிட்ட வெப்சீரிஸ்களையும் களமிறக்கி உள்ளது.

    இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை தெரிஞ்சுக்கலாமா.. ஆர் யூ ரெடி? இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை தெரிஞ்சுக்கலாமா.. ஆர் யூ ரெடி?

    25 ஆண்டுகள்

    25 ஆண்டுகள்

    1997ம் ஆண்டு ரீட் ஹாஷ்டிங்க்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ப் இணைந்து ஒரு சாதாரண டிவிடி வாடகை கடையாக நெட்பிளிக்ஸை ஆரம்பித்துள்ளனர். சினிமா மற்றும் டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சியால் இன்டெர்நெட்டுக்கு வந்த நெட்ஃபிளிக்ஸ் இன்று உலகளவில் மிகப்பெரிய ஓடிடி நிறுவனமாக மாறி உள்ளது.

    பாப்புலரான வெப்சீரிஸ்

    பாப்புலரான வெப்சீரிஸ்

    உலகளவில் பாப்புலரான வெப்சிரீஸ்களான மணி ஹெயிஸ்ட், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், ஸ்குவிட் கேம் , செக்ஸ் எஜுகேஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் நெட்ஃபிளிக்ஸில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளிலும் நெட்ஃபிளிக்ஸ் செயல்பட்டு வருகிறது.

    தனுஷ் படம்

    தனுஷ் படம்

    தனுஷின் ஜகமே தந்திரம், தி கிரேமேன் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின. ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்துக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகி வருகிறது.

    ஆர்ஆர்ஆர் படத்துக்கு அங்கீகாரம்

    ஆர்ஆர்ஆர் படத்துக்கு அங்கீகாரம்


    தியேட்டரில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை ஈட்டினாலும், நெட்ஃபிளிக்ஸில் அந்த படம் வெளியான பிறகு தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தனர். ஹாலிவுட் இயக்குநர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆர்ஆர்ஆர் படத்தைக் கொண்டாட காரணமே நெட்ஃபிளிக்ஸில் அது வெளியானது தான்.

    இரண்டாம் இடத்தில்

    இரண்டாம் இடத்தில்

    220 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் உலகளவில் நம்பர் ஒன் ஓடிடி தளமாக இருந்த நெட்ஃபிளிக்ஸில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் சொதப்பிய நிலையில், அதிரடியாக 2 மில்லியன் சந்தாதாரர்கள் நெட்ஃபிளிக்ஸை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் உள்ளிட்ட பிரம்மாண்ட வெப்சீரிஸ்களை களமிறக்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 221.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீக்கிரமே இந்த போட்டியில் முந்துவதற்கு தேவையான வேலைகளை நெட்ஃபிளிக்ஸ் பார்த்து வருகிறது.

    English summary
    OTT Giant Netflix celebrates its 25th Anniversary and releases a special rewind video of its 25 years journey. It recently releases Russo Brothers The Gray Man and so many webseries for its audiences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X