பொன்னியின் செல்வன், நானே வருவேனை தொடர்ந்து ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்….

சென்னை: சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் திரையரங்குகளை விட ஓடிடியில் சூப்பரான ரிலீஸ்கள் காத்திருக்கின்றன.

தீபாவளி ரிலீஸுக்கு பின்னர் திரையரங்குகளில் பெரிதாக வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை.

அதனால், ஓடிடி ரசிகர்களை குறிவைத்து சூப்பர் படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் களமிறங்கியுள்ளன.

அமேசானில் பொன்னியின் செல்வன்

அமேசானில் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பொன்னியின் செல்வன் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்ஸாக இன்று அமேசானில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன். ஆனால், இந்தப் படம் HD குவாலிட்டியில் ரூ.199க்கு ரெண்டல் அடிப்படையில் பார்க்கலாம் என அமேசான் அறிவித்துள்ளது. HD குவாலிட்டி வேண்டாம் சாதா தோசையே போதும் என நினைக்கும் அமேசான் சப்ஸ்கிரைபர்கள் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஓடிடியில் ஹிட் அடித்த நானே வருவேன்

ஓடிடியில் ஹிட் அடித்த நானே வருவேன்

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ஒருநாள் முன்னதாக செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது நானே வருவேன். செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் பல வருடங்களுக்குப் பின்னர் வெளியான இந்தப் படம், திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், நேற்று அமேசானில் வெளியான நானே வருவேன், ஓடிடி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது. முக்கியமாக தனுஷின் நெகட்டிவான கதிர் கேரக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு நானே வருவேன் தான் ஒர்த்தான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பேட்டைக்காளி, ஜான்ஸி

பேட்டைக்காளி, ஜான்ஸி

பொன்னியின் செல்வன், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களுக்கும் இரண்டு ரிலீஸ்கள் இந்த வாரம் காத்திருக்கின்றன. ஆஹா தமிழ் ஓடிடியில் சென்ற வாரம் பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் ஒளிப்பரப்பானது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது எபிசோட் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ், முதல் எபிசோடில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், தெலுங்கில் அஞ்சலி நடித்துள்ள ஜான்ஸி வெப் சீரிஸ், ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இது ஆக்‌ஷன் திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்த வெப் சீரிஸ்ஸாக இருக்கும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

ஃபிளேம்ஸ் S3, பார்பேரியன்

ஃபிளேம்ஸ் S3, பார்பேரியன்

மேலும், மலையாளத்தில் அப்பன் திரைப்படம் சோனி ஓடிடியிலும், சுபாஷ் சந்திரபோஷ் அமேசான் ப்ரைமிலும் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் ரசிகர்களுக்காக பார்பேரியன், Matriarch திரைப்படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல், இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஃபிளேம்ஸ் வெப் சீரிஸின் 3வது சீசன் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதுதவிர மேலும், சில படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X