இரவின் நிழல் முதல் சினம் வரை: ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

சென்னை : கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியதால் அந்த நேரத்தை சரியாக ஓடிடி தளங்கள் பயன்படுத்திக்கொண்டு புதுப்படங்களை வாங்கி ஓடிடியில் நேரடியாக வெளியிட்டன.

கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களுக்கு திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு புதுவித அனுபவமாக இருந்தன.

இப்போது, தியேட்டரில் படத்தை தவறவிட்டால் சில நாட்களில் ஓடிடியில் பார்க்கலாம். ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படம்வந்துருக்கு எந்த படத்தை பார்க்கலாம் என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்

சினம்

சினம்

அருண் விஜய்யின் நடிப்பில் யானை மற்றும் சினம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.அடுத்ததாக பார்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அருண் விஜய்யின் சினம் திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது

பிஸ்தா

பிஸ்தா

மெட்ரோ சிரிஷ், சதீஷ், யோகி பாபு, மிருதுளா, நமோ நாராயணன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் பிஸ்தா. படத்தை ரமேஷ் பாரதி இயக்கியிருக்கிறார். திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படம், அமேசான் பிரைமியில் பார்க்கலாம்.

Rorschach (மலையாளம்)

Rorschach (மலையாளம்)

மம்மூட்டி, ஆசிப் அலி, அஸ்கார் அலி, பிந்து பணிக்கர் ஆகியோர் நடித்து நிஸாம் பஷீர் இயக்கியிருக்கும் படம் ராட்சசா. ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் இது. படம் சற்று மெதுவாக நகர்வதைப் போல இருந்தாலும், நன்றாக இருப்பதாக ஆரம்பகட்ட விமர்சனங்கள் வந்துள்ளது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

குரு சிஷ்யரு (கன்னடம்)

குரு சிஷ்யரு (கன்னடம்)

கோ கோ விளையாட்டை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் குரு சிஷ்யரு. கன்னடத் திரைப்படம் இப்படம் கடந்த மாதம் திரையில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் வீரராகவும் பயிற்சியாளராகவும் ஷரண் நடித்திருந்தார். இப்படம் நேற்று முதல் Zee5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மோனிகா ஓ மை டார்லிங்

மோனிகா ஓ மை டார்லிங்

ராஜ்குமார் ராவ், ராதிகா ஆப்தே, ஹுமா குரேஷி மற்றும் சிக்கந்தர் கெர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மோனிகா ஓ மை டார்லிங். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ் பார்க்கலாம்.

பாத்தோன்பதாம் நோட்டாண்டு (மலையாளம்)

பாத்தோன்பதாம் நோட்டாண்டு (மலையாளம்)

விநாயன் இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம் பத்தோன்பதாம் நோட்டண்டு. இப்படத்தில் சிஜு வில்சன், அனூப் மேனன், இந்திரன்ஸ், செம்பன் வினோத் ஜோஸ், கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 19 நூற்றாண்டில் நிலவிய சமூக அநீதி மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய ஈழவப் போராளி அறட்டுப்புழா வேலாயுத பணிக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதி திரையில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X