twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    OTT Play Awards 2022: அசத்திய ஜெய்பீம், சாதித்த பா ரஞ்சித்… விருதுகளை குவித்த கோலிவுட்

    |

    மும்பை: ஓடிடியில் வெளியாகும் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், முதல் ஓடிடிப்ளே விருதுகள் வழங்கும் நிகழ்ந்ச்சி மும்பையில் நடைபெற்றது.

    இதில், நாடு முழுவதும் ஓடிடியில் வெளியான சிறந்த ஓடிடி படங்கள், வெப் சீரிஸ்கள், அதில் நடித்த, பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

    பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரைப்படங்களும், கலைஞர்களும் ஓடிடி ப்ளே விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    சீதா ராமம் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு: காத்திருக்கும் துல்கர் சல்மான் ரசிகர்கள்சீதா ராமம் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு: காத்திருக்கும் துல்கர் சல்மான் ரசிகர்கள்

    ஓடிடி படைப்புகளுக்கான விருது விழா

    ஓடிடி படைப்புகளுக்கான விருது விழா

    கொரோனாவுக்கு முன்பு வரை உருவான அனைத்து திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வந்தன. கொரோனா ஊரடங்கு காலங்களில் இந்தியா முழுவதும் ஓடிடி தளங்களின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்தது. திரையரங்குகளில் பார்வையாளர்களை அனுமதிப்பில் சிக்கல்கள் இருந்ததால், பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. மேலும், 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் ஏற்படுத்திய தாக்கத்தால், நிறைய வெப் சீரிஸ்களும் உருவாகின. இந்நிலையில், ஓடிடியில் வெளியாகும் படைப்புகளுக்காக தனியாக விருது வழங்கும் ஏற்பாடுகள் நடந்தன.

    முதன்முறையாக ஓடிடி ப்ளே விருதுகள்

    முதன்முறையாக ஓடிடி ப்ளே விருதுகள்

    இதனையடுத்து, திரைத்துறை, மூத்த பத்திரிகையாளர்கள் அடங்கிய சிறப்பு ஜூரி குழு அமைத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை, ஓடிடியில் வெளியான படங்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஓடிடி மூலம் அறிமுகமான கலைஞர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

    அசத்திய தமிழ் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள்

    அசத்திய தமிழ் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள்

    முதன்முறையாக நடைபெற்ற ஓடிடி ப்ளே 2022 விருதுகள் விழாவில், சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியான 'ஜெய் பீம்', பிரபலமான சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் விருது வென்றுள்ளது. இந்தப் படத்துடன் இந்தியில் வெளியான 'ஷெர்ஷா'வும் இதேபிரிவில் விருதை வென்றது. மேலும், ஓடிடிப்ளே ரீடர் சாய்ஸ் விருது பிரிவில், சிறந்த வெப் சீரிஸ்ஸாக விமல் நடித்த விலங்கு தேர்வாகியுள்ளது.

    கவனம் ஈர்த்த பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை

    கவனம் ஈர்த்த பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை

    பா ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படமும் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்தப் படத்திற்கும் ஓடிடி ப்ளே விருது விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா, ஜூரி தேர்வு பிரிவில் சிறந்த நடிகர் விருது வென்றார். அவருடன், இந்தியில் ரிலீஸான தூபான் படத்தின் ஹீரோ ஃபரான் அக்தர் சிறந்த நடிகருக்கான ஜூரி விருதை வென்றார்.

    இந்த தசாப்தத்தின் சிறந்த இயக்குநர்

    இந்த தசாப்தத்தின் சிறந்த இயக்குநர்

    ஆர்யா, ஃபரான் அக்தர் இருவருமே குத்துச் சண்டை வீரர்களாக நடித்து, இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக இந்த தசாப்தத்தின் சிறந்த இயக்குநர் விருதை பா. ரஞ்சித் வென்றுள்ளார். மேலும், வளர்ந்து வரும் ஓடிடி ஸ்டார் நடிகை விருதை சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயனும், கானேக்கானே படத்தில் நடித்த ஐஸ்வர்யா ஸட்சுமியும் பெற்றுள்ளனர்.

    விருது வென்ற மற்றவர்களின் பட்டியல்

    விருது வென்ற மற்றவர்களின் பட்டியல்

    மேலும், பல பிரிவுகளில் ஓடிடி ப்ளே விருதுகள் வழங்கப்பட்டன.

    சிறந்த வெப் ஒரிஜினல் படம் - தஸ்வி (ஜூரி தேர்வு)

    சிறந்த வெப் சீரிஸ் - தி பேமிலி மேன்

    சிறந்த வெப் சீரிஸ் - தப்பர் (ஜூரி தேர்வு)

    சிறந்த திரைப்பட இயக்குநர் - ஷூஜிட் சிர்கார் (சர்தார் உதம்)

    சிறந்த வெப் சீரிஸ் இயக்குநர் - ராம் மாதாவனி, வினோத் ராவத், கபில் ஷர்மா (ஆர்யா 2)

    சிறந்த திரைப்பட நடிகர் - கார்த்திக் ஆர்யன் (தமாக்கா)

    சிறந்த திரைப்பட நடிகை - டாப்ஸி (ஹாசீன் தில்ருபா)

    சிறந்த திரைப்பட நடிகை ஜூரி தேர்வு - வித்யா பாலன் (ஜல்சா)

    சிறந்த வெப் சீரிஸ் நடிகர் - தாஹிர் ராஜ் பாசின் (யேக் காலி காலி அங்கெய்ன்)

    சிறந்த வெப் சீரிஸ் நடிகை - ரவீணா டன்டன் (ஆரண்யாக்)

    சிறந்த வெப் சீரிஸ் நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (தி பேமிலி மேன் - ஜூரி தேர்வு )

    சிறந்த வில்லன் நடிகர் - கிஷோர் (ஷீ 2 வெப் சீரிஸ்)

    வளர்ந்து வரும் ஓடிடி ஸ்டார் நடிகர் - பிரியதர்ஷி (அன்கார்டு அண்டு லாசர் 2)

    திருப்புமுனையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் - குரு சோமசுந்தரம் (மின்னல் முரளி)

    திருப்புமுனையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை - சாரா அளி கான் (ஆத்ரங்கி ரே) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    English summary
    The first OTT Play Awards ceremony was held in Mumbai. In this, the best OTT films were released in OTT across the country and the artists were honored with awards. Director Ranjith, Actress Dushara Vijayan, Jai Bhim Movie, and Vilangu Web Series won awards at the event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X