For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஓடிடியில் ரிலீசாகும் படம் மற்றும் வெப் சிரீஸ்...இந்த வார வீக்கென்டில் பக்கா பிளான் போடுங்க!

  |

  சென்னை : பெரிய நடிகர்களின் படமோ...சிறிய நடிகர்களின் படமோ அதை தியேட்டரில் விசில் அடித்துக்கொண்டும், பாப் கார்ன் தின்றுகொண்டு பார்க்கும் சுகமே தனிதான்.

  புதுப்படங்கள் என்றாலே தியேட்டர் ரிலிஸ்தான் என்ற வழக்கமான முறையை மாற்றியது கொரோனா தான். கொரோனா பரவிய நேரத்தில் தியேட்டர்கள் மூடியதால் அந்த நேரத்தை சரியாக ஓடிடி தளங்கள் பயன்படுத்திக்கொண்டு புதுப்படங்களை வாங்கி ஓடிடியில் நேரடியாக வெளியிட்டன.

  கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களும் வீடு தேடி வந்த புதுப்படத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் இதுவே பழகிவிட்டது. இப்போது, தியேட்டரில் படத்தை தவறவிட்டால் சில நாட்களில் ஓடிடியில் பார்க்கலாம். ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படம் வருதுனு பார்க்கலாமா?

  அசீம் டிஸ்சார்ஜ்... மணிகண்டன் அட்மிட்… பிக் பாஸ் ரசிகர்களிடம் சிக்கிய அடுத்த அமிதாப் மாமா!அசீம் டிஸ்சார்ஜ்... மணிகண்டன் அட்மிட்… பிக் பாஸ் ரசிகர்களிடம் சிக்கிய அடுத்த அமிதாப் மாமா!

  இரவின் நிழல்

  இரவின் நிழல்

  இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' என்ற சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் நவம்பர் 11ந் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

  பேட்டை காளி

  பேட்டை காளி

  ஜல்லிக்கட்டை வைத்து பேட்டை காளி என்ற திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். கலையரசன், கிஷோர், வேலராமமூர்த்தி, ஷீலா உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸ்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த தொடர் நவம்பர் 11-ஆம் தேதியன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணனின் தெரிக்க விடும் இசையில் உருவாகியுள்ள இந்த மினி சீரிஸை காண்பதற்காக பலர் ஆர்வமுடன் உள்ளனர்.

  மோனிகா ஓ மை டார்லிங்

  மோனிகா ஓ மை டார்லிங்

  ராஜ்குமார் ராவ், ராதிகா ஆப்தே, ஹுமா குரேஷி மற்றும் சிக்கந்தர் கெர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மோனிகா ஓ மை டார்லிங். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் வெளியிடுகிறது.

  பாத்தோன்பதாம் நோட்டாண்டு (மலையாளம்)

  பாத்தோன்பதாம் நோட்டாண்டு (மலையாளம்)

  விநாயன் இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம் பத்தோன்பதாம் நோட்டண்டு. இப்படத்தில் சிஜு வில்சன், அனூப் மேனன், இந்திரன்ஸ், செம்பன் வினோத் ஜோஸ், கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 19 நூற்றாண்டில் நிலவிய சமூக அநீதி மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய ஈழவப் போராளி அறட்டுப்புழா வேலாயுத பணிக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதி திரையில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

  ப்ரீத் இன்டு தி ஷோடோஸ்ப்ரீத் இன்டு தி ஷோடோஸ்

  ப்ரீத் இன்டு தி ஷோடோஸ்ப்ரீத் இன்டு தி ஷோடோஸ்

  அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள வெப் தொடர் தான் ப்ரீத் இன்டு தி ஷோடாஸ். இதில், அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். மல்டிபிள் டிஸ்ஆர்டர் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த கதையில், நல்லவன் மற்றும் அரக்கன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் அபிஷேக் அட்டகாசமாக நடித்துள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலை,திகில் என தொடர் அட்டகாசமாக உள்ளது.

  English summary
  Parthiban's Iravin Nizhal, Vetrimaran's Pettakaali, Pathonpatham Noottand this week OTT Releases.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X