For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் வந்தாச்சு.. நீங்க என்ன படம் பாக்க போறீங்க!

  |

  சென்னை : கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. திரையரங்கில் பார்க்க முடியாமல் போன படங்களை ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வார இறுதி நாட்களில் மக்கள் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

  மக்களின் விருப்பத்தை புரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் புது புது படங்கள், வெப் தொடர்களை வெளியிட்டு வருகின்றன.

  இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம்.

  நெட்பிளிக்ஸில் வெளியான லவ் டுடே… நள்ளிரவு முதல் கொண்டாடித் தீர்க்கும் ஓடிடி ரசிகர்கள்!நெட்பிளிக்ஸில் வெளியான லவ் டுடே… நள்ளிரவு முதல் கொண்டாடித் தீர்க்கும் ஓடிடி ரசிகர்கள்!

  விட்னஸ்

  விட்னஸ்

  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விட்னஸ். மேலும், இப்படத்தில், ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். தீபக் இயக்கி உள்ள இப்படத்தில்,தூய்மைப்பணியாளர்களும் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  மச்செர்லா நியோஜகவர்கம் (தெலுங்கு)

  மச்செர்லா நியோஜகவர்கம் (தெலுங்கு)

  ''மச்செர்லா நியோஜகவர்கம்'' தெலுங்கு திரைப்படமான இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நிதின், கிருத்தி ஷெட்டி, சமுத்திரக்கனி, ராஜேந்திர பிரசாத், கேத்தரின் தெரசா, வெண்ணெலா கிஷோர், முரளி சர்மா, ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் OTT உரிமையை OTT தளமான Zee5 வாங்கி உள்ளதால், டிசம்பர் 9ந் தேதி முதல் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.

  லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் (தெலுங்கு)

  லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் (தெலுங்கு)

  லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் திரைப்படம் டிசம்பர் 9ந் தேதி SonyLiv தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் மேர்லபாகா காந்தி உருவான இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில், சந்தோஷ் ஷோபன், ஃபரியா அப்துல்லா, பிரம்மாஜி, நரேன், மைம் கோபி, சுதர்ஷன், மிர்ச்சி கிரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

  'உர்வசிவோ ராக்ஷசிவோ' (தெலுங்கு)

  'உர்வசிவோ ராக்ஷசிவோ' (தெலுங்கு)

  வழக்கமான குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காதல் கலந்த திரைப்படம் தான் 'உர்வசிவோ ராக்ஷசிவோ' . ஜிஏ2 பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ திருமலா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அல்லு சிரிஷ், அனு இம்மானுவேல், வெண்ணேலா கிஷோர், சுனில், அமானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் டிசம்பர் 9 ஆம் தேதியில் இருந்து பார்க்கலாம்.

  வதந்தி (வெப் தொடர்)

  வதந்தி (வெப் தொடர்)

  கொலைகாரன் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர் டிசம்பர் 2ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசானது. ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மங்களை இந்த வெப் தொடர் அழகாக பிரதிபலித்துள்ளது இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். சுவாரசியமான இந்த வெப் தொடரை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

  இந்தியன் பிரிடேட்டர்: பீஸ்ட் ஆஃப் பெங்களூர்’

  இந்தியன் பிரிடேட்டர்: பீஸ்ட் ஆஃப் பெங்களூர்’

  'இந்தியன் பிரிடேட்டர்: பீஸ்ட் ஆஃப் பெங்களூர்' என்பது உண்மையான குற்றத் தொடராகும். ஆறு மாதத்திற்குள் வெளியாகி உள்ள நான்காவது சீசன் இதுவாகும். இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளிலும் டிசம்பர் 16ந் தேதி முதல் நெட்ஃபிக்ஸில் பார்க்கலாம்.

  English summary
  Make time for exciting OTT movies and web series releasing this weekend.urvasivo rakshasivo, macherla niyojakavargam,Witness OTT movies
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X