Don't Miss!
- News
மின்சார சட்டத் திருத்தத்தால் மாநில உரிமையைப் பறிப்பதா? வாபஸ் பெற மத்திய அரசுக்கு சீமான் வேண்டுகோள்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Automobiles
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
Paper Rocket Webseries: அந்த லிப் லாக் சீனுக்கு கூட ஒரு சூப்பர் ஸ்டோரி.. கிருத்திகா உதயநிதி அசத்தல்!
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகி உள்ள பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி முதல் முறையாக ஓடிடிக்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
7 எபிசோடுகள் கொண்ட அந்த வெப்சீரிஸில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் அடிக்கும் அந்த லிப் லாக் சீனுக்கு கூட சூப்பரான கதையை உருவாக்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
Paper Rocket Review: கிருத்திகா உதயநிதியின் ஃபீல் குட் வெப்சீரிஸ்.. பேப்பர் ராக்கெட் விமர்சனம் இதோ!

நல்ல நல்ல வெப்சீரிஸ்
ஃபிங்கர் டிப், பேப்பர் ராக்கெட் போன்ற நிறைய நல்ல நல்ல வெப்சீரிஸ்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், 96 புகழ் கெளரி கிஷன், கருணாகரன், ரேணுகா, பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

பேப்பர் ராக்கெட் கதை என்ன
அப்பாவை இழந்து வாடும் மகன் அவருடன் கடைசி காலத்தில் இல்லையே என்கிற குற்ற உணர்ச்சியை போக்க க்ரூப் செஷன் ஒன்றில் கலந்து கொள்ள, அங்கே இவரை விட பல கஷ்டங்களுக்கு நடுவே வாழ்ந்து வரும் 5 பேரின் ஆசையை நிறைவேற்ற ஒவ்வொரு ஊருக்காக போகும் ட்ரிப் கதை தான் இந்த பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸின் கதை. கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவகார்த்திகேயன் பாராட்டு
பேப்பர் ராக்கெட்டை போலவே அதற்கு விமர்சனங்களும் நல்லா பாசிட்டிவ் ஆக வருவது ரொம்பவே சந்தோஷத்தை தருகிறது. கிருத்திகா உதயநிதி டீமுக்கே என் மனமார்ந்த நன்றி. இந்த வாரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்த வெப்சீரிஸை பார்த்து மகிழுங்கள் என பாராட்டி உள்ளார். ஜீ5 ஓடிடி நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

லிப் லாக் சீன்
வெப்சீரிஸ் என்றாலே ஆபாச காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் நிறைந்து காணப்பட்டு வரும் நிலையில், ஆபாச காட்சிகளே இல்லாமல் அழகான ஃபீல் குட் வெப்சீரிஸாக வெளியாகி இருக்கிறது. ஆனால், ஹீரோயின் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹீரோ காளிதாஸ் ஜெயராம் இடையே ஒரே ஒரு லிப் லாக் சீன் மட்டும் இருக்கிறது. ஆனால், அந்த காட்சியும் தப்பாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அதற்காக ஒரு அழகான கதையை பண்ணி பாராட்டுக்களை அள்ளி உள்ளார் கிருத்திகா உதயநிதி.

ஹீரோயினோட பிரச்சனை
சுழல் வெப்சீரிஸில் சித்தப்பாவே இரண்டு பெண்களிடமும் தப்பாக நடந்து கொள்ளும் கதையை சொல்லி அதிர வைத்து இருப்பார்கள். பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸில் முத்தம் கொடுக்க வந்த காதலனை பாட்டிலால் மண்டையை உடைத்து மர்டர் அட்டம்ப்ட் கேஸில் சிக்கி இருக்கும் தான்யா ரவிச்சந்திரன் தான் ஏன் அப்படி செய்தேன் என்றும் அதற்கு யார் காரணம் என்று கூறி கிளைமேக்ஸில் செய்யும் தரமான சம்பவம் ஜாலியான ட்ரிப்புக்கு இடையே ஒரு ஸ்ட்ராங் சோஷியல் மெசேஜாக அமைந்துள்ளது.