பொன்னியின் செல்வன், பிரம்மாஸ்திரா.. இரண்டு பிரம்மாண்ட படங்களின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

பாலிவுட்டை காப்பாற்ற வந்த பிரம்மாஸ்திரா திரைப்படமும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

475 கோடி வசூல்

475 கோடி வசூல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை 475 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 450 கோடிக்கும் அதிக வசூலை பொன்னியின் செல்வன் ஈட்டி உள்ளதாக தற்போது ட்வீட் போட்டு இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் பொன்னியின் செல்வன் 500 கோடி எனும் எலைட் கிளப்பில் இணைவது கன்ஃபார்ம்.

பாலிவுட்டை காப்பாற்றிய படம்

பாலிவுட்டை காப்பாற்றிய படம்

இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான பல பெரிய நடிகர்களின் படங்கள் படு தோல்வியை சந்தித்தன. ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி 250 கோடி வசூல் செய்திருந்தது. புல் புலாயா 2 திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. அந்த படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் 400 கோடிக்கும் அதிகமாக ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரம் திரைப்படம் தான் அதிக வசூலை ஈட்டியது என்கின்றனர். ஆனால், 5 ஆண்டுகளாக உருவான அந்த படத்தின் பட்ஜெட்டே 400 கோடிக்கும் மேல் என்றும் கூறப்படுகிறது.

பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ்

பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ்

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் நடிப்பில் சிஜி மிரட்டலாக வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் எப்போ ஓடிடியில் வெளியாகும் என நாடுமுழுவதும் படம் பார்த்தால் ஓடிடியில் வந்தால் மட்டுமே பார்ப்போம் என உறுதியாக இருக்கும் ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்து வரும் நவம்பர் 4ம் தேதி பிரம்மாஸ்திரா படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் எப்போ

பொன்னியின் செல்வன் எப்போ

செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் இன்னமும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் நவம்பர் 4ம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னமோ அல்லது லைகா நிறுவனமோ வெளியிடவில்லை. அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும், ஆர்ஆர்ஆர் படத்தை போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் வெளியாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இந்த இரு படங்களுக்கும் முன்பாக வெளியான நடிகர் பார்த்திபனின் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் படம இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அவர் அறிவித்தே சில வாரங்கள் ஆகி விட்டன. தீபாவளி ரிலீஸாக இரவின் நிழல் ஓடிடியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே அந்த நல்ல செய்தியை பார்த்திபனே அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X