twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் ஓடிடி பிசினஸ்… இப்பவே 125 கோடி வசூல்…. அப்போ பாக்ஸ் ஆபிஸ்லயும் சம்பவம் இருக்கு

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மல்டி ஸ்டார் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

    இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

     ரஜினியே நடிக்க விரும்பிய பொன்னியின் செல்வன்..நடிக்க மறுத்த அமலாபால்..துணிச்சல் அதிகம் தான் ரஜினியே நடிக்க விரும்பிய பொன்னியின் செல்வன்..நடிக்க மறுத்த அமலாபால்..துணிச்சல் அதிகம் தான்

    காத்திருக்கும் இந்தியத் திரையுலகம்

    காத்திருக்கும் இந்தியத் திரையுலகம்

    தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது சாத்தியமாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் மிகப் பெரிய மல்ட் ஸ்டார் படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே இந்த பிரம்மாண்ட படைப்பைக் காண ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

    ரிலீஸ் முன்பே 125 கோடி வசூல்

    ரிலீஸ் முன்பே 125 கோடி வசூல்

    லைகா தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்', பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. இதனால், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம், பொன்னியின் செல்வன் உரிமையை வாங்கியது. குறிப்பாக 125 கோடி ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு பாகங்களையும் வாங்கிய அமேசான்

    இரண்டு பாகங்களையும் வாங்கிய அமேசான்

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 2ம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து 125 கோடி ரூபாய்க்கு அமேசான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலை எட்டியுள்ளதால், திரையரங்குகளில் வசூல் தாறுமாறாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சேட்டிலைட் உரிமைக்கும் கோடிகள் வியாபாரம்

    சேட்டிலைட் உரிமைக்கும் கோடிகள் வியாபாரம்

    பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமை 125 கோடிக்கு விற்பனையானதாக வெளியான தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே படத்தின் சேட்டிலைட் உரிமைக்கும் கடுமையான போட்டி நிலவியதாகவும், இப்போது முன்னணி தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஓடிடி உரிமை போன்றே இங்கேயும் பல கோடிகளுக்கு பிஸினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Ponniyin Selvan Movie OTT Rights Cost (பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமை விலை): Mani Ratnam directed Ponniyin Selvan film will hit the theatres on September 30. It has been reported that Amazon prime has bought the OTT rights of this film for 125 crore rupees
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X