twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமேசான் ப்ரைமில் வெளியான பொன்னியின் செல்வன்... ஓடிடி ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்…

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை திடீரென ஓடிடியில் வெளியிட்டு படக்குழு அதிர்ச்சியளித்துள்ளனர்.

    காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா? காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா?

    தீபாவளி ரேஸில் பொன்னியின் செல்வன்

    தீபாவளி ரேஸில் பொன்னியின் செல்வன்

    ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட கூட்டணி, ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்நிலையில், தீபாவளியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது பொன்னியின் செல்வன்.

    அமேசான் ப்ரைமில் வெளியானது

    அமேசான் ப்ரைமில் வெளியானது

    பொன்னியின் செல்வன் படத்துக்கு தொடர்ந்து திரையரங்க ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வரும் நிலையில், திடீரென ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ளது. அதாவது 199 ரூபாய் ரெண்டல் அடிப்படையில் இந்தப் படத்தை பார்க்கலாம் என அமேசான் அறிவித்துள்ளது. அதன்படி, 199 ரூபாய் வாடகை செலுத்தி, 30 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் ஒருமுறை பார்க்கத் துவங்கிவிட்டால் அதை 48 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    நவம்பரில் முழுமையான ரிலீஸ்

    நவம்பரில் முழுமையான ரிலீஸ்

    திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே அமேசானில் ரெண்டல் அடிப்படையில் பொன்னியின் செல்வன் வெளியானது ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஹெச்டியாக பார்க்க வேண்டுமானால் இதற்கான வாடகை ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டிருந்தாலும், சப்ஸ்கிரைபர்கள் இந்த படத்தை பார்க்க முடியாது. கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தியேட்டருக்கு போய், ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 செலவு செய்வதை விட, ரூ.199 கட்டணம் செலுத்தி வீட்டிலேயே குடும்பத்தோடு பார்த்துவிடலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். மற்ற சப்ஸ்கிரைபர்கள், இது என்ன கொடுமை என திரையை வெறிக்க பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே தவிர, படத்தை பணம் தராமல் பார்க்க முடியாது. அதேநேரம், நவம்பர் 4ம் தேதி அல்லது 11ல் இருந்து அமேசான் சந்தாதாரர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் தற்போது அமேசானில் வெளியாகியுள்ளது, ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    500 கோடி பாக்ஸ் ஆபிஸ்

    500 கோடி பாக்ஸ் ஆபிஸ்

    லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த பாகம் 2023 சம்மரில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் படம் இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் தான் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளது. முன்னதாக ரஜினியின் 2.O 45 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது அதனை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளதாகவும், இதுவரை 50 கோடி கலெக்‌ஷன் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Ponniyin Selvan now streaming on Amazon prime for Rental for RS.199. This rental includes 30 days to start watching this film and 48 hour time once started. It has been reported, Amazon prime subscribers will be available from November 4th or 11th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X