twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்...இவ்வளவு கம்மியான தொகைக்கா வாங்கினாங்க ?

    |

    சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    Recommended Video

    Ponniyin Selvan படத்தில் வில்லன் யார்? *Entertainment

    பொன்னியின் செல்வன் நாவலின் கதையை முதலில் ஒரே படமாக எடுக்க தான் மணிரத்னம் நினைத்துள்ளார். ஆனால் கதையின் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்பாததாலும், எந்த ஒரு சிறிய விஷயத்தையும் மிஸ் செய்து விட்ட உணர்வு ரசிகர்களுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இதை இரண்டு பாகங்களாக இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை கோடை விடுமுறை கொண்டாட்டமாக மே அல்லது ஜுன் மாதத்தில் தான் ரிலீஸ் செய்ய முதலில் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், படத்தின் ரிலீசை பிறகு செப்டம்பருக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    ப்ரொமோஷன் வேலைகள்

    ப்ரொமோஷன் வேலைகள்

    மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை தீவிரமாக துவக்கி உள்ளனர் படக்குழுவினர். டீசரைத் தொடர்ந்து, டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாததால் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.

    விக்ரம் டப்பிங் வீடியோவால் குழப்பம்

    விக்ரம் டப்பிங் வீடியோவால் குழப்பம்


    இந்த வீடியோவால் ரசிகர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட டீசரில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் லோகோ மட்டும் தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட விக்ரமின் டப்பிங் மேக்கிங் வீடியோவில் லைகா ப்ரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய லோகோக்களுடன் அமேசான் ப்ரைம் வீடியோ லோகோவும் இடம்பெற்றிருந்தது.

     பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ்

    பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ்

    இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், பொன்னியின் செல்வனில் அமேசான் லோகோவா? அப்படியானால் பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் வாங்கி விட்டதா? இதுவரை இது பற்றி எந்த தகவலும் வரவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர். ஆனால் விசாரித்து பார்த்ததில், அது உண்மை தானாம். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ தான் வாங்கி உள்ளது.

    இவ்வளவு கம்மியான விலைக்கா

    இவ்வளவு கம்மியான விலைக்கா

    அமேசான் நிறுவனம் 125 கோடிக்கு பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பெரிய தொகை தான் என்றாலும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் இது குறைவு தான். 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட, அதுவும் பலரும் ஆர்வமாக பார்க்க காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை இவ்வளவு கம்மியான விலைக்கா அமேசான் வாங்கி இருக்கும் என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    வெளியீட்டு உரிமம் யாருக்கு

    வெளியீட்டு உரிமம் யாருக்கு

    பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு மட்டுமல்ல வெளியீட்டு உரிமத்தையும் தன்னிடம் தான் வைத்துக் கொண்டுள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ். படத்தின் ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The digital streaming rights for the film were purchased by Amazon Prime Video for Rs.125 crore.The distribution rights of the film in Tamil Nadu has been acquired by Lyca Productions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X