பொன்னியின் செல்வன் சக்சஸ்.. ஜெயம் ரவியின் அடுத்த படத்தோட ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை: பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 350 கோடி வசூலை தாண்டி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சனி மற்றும் ஞாயிறுகளில் 400 கோடியை கடந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் கார்த்தி, சியான் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோரின் மார்க்கெட்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிஸ் பண்ண விஜய்

மிஸ் பண்ண விஜய்

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் விஜய்யையும், அருள்மொழி வர்மனாக மகேஷ் பாபுவையும் வைத்து மிக பிரம்மாண்ட இயக்க மணிரத்னம் நினைத்தார். ஆனால், துப்பாக்கி பட வாய்ப்புக்காக விஜய் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் விஜய் நடிக்காமலே இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூவரும் ஹேப்பி

மூவரும் ஹேப்பி

ஆனால், அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி மற்றும் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி உள்ளிட்ட மூவரும் செம சந்தோஷத்தில் உள்ளார்களாம். உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது மட்டுமின்றி அவர்களின் அடுத்தடுத்த படங்களின் மார்க்கெட்டும் பெரிதாகி உள்ளதாம்.

இறைவன்

இறைவன்


வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய இயக்குநர் அகமது ஜெயம் ரவி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள இறைவன் திரைப்படம் சத்தமில்லாமல் ஷூட்டிங்கே முடிந்து விட்டதாம். விரைவில் வெளியாக உள்ள அந்த படத்தின் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஜிட்டல் உரிமம்

டிஜிட்டல் உரிமம்

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜீ நெட்வொர்க் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை 55 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுவரை ஜெயம் ரவியின் படங்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் உயரும்

சம்பளம் உயரும்

அகிலன், இறைவன் என அடுத்தடுத்து இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு சம்மருக்கே வர உள்ள நிலையில், அவரது மார்க்கெட் எங்கேயோ சென்று விடும் என்கின்றனர். இந்நிலையில், அடுத்த படத்திற்கு 30 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்களே தயாராக உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தனி ஒருவன் 2 படமும் எடுக்க அண்ணன் மோகன் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் ஜெயம் ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X