Don't Miss!
- News
WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நெட்பிளிக்ஸில் வெளியான லவ் டுடே… நள்ளிரவு முதல் கொண்டாடித் தீர்க்கும் ஓடிடி ரசிகர்கள்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்ற லவ் டுடே இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி தரமான சம்பவம் செய்து வருகிறது.
தனலட்சுமி
விஷப்பாம்பு..ரச்சிதா
பற்றி
எதுவும்
கேட்காதீங்க..பேட்டியில்
மனம்
திறந்த
ராபர்ட்
மாஸ்டர்!

ஒரு நாயகன் உதயமாகினான்
கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டினார். 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கோமாளி, 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே படத்தில் அவரே ஹீரோவாகவும் அறிமுகமானார். முதல் படத்தில் இயக்குநர், இரண்டாவது படத்தில் இயக்குநர் ப்ளஸ் ஹீரோ என என்ட்ரி கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்களிடம் செம்ம ரீச் கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் லவ் டுடே திரைப்படமும் பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்தது.

வசூல் மழையில் லவ் டுடே
தமிழில் சூப்பர் ஹிட் அடித்த லட் டுடே, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாஸ் ஹிட் கொடுத்துள்ள லவ் டுடே, இதுவரை 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமே 10 முதல் 15 கோடி வரை பட்ஜெட்டில் உருவான சின்ன பட்ஜெட் படமான லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோக்களுக்கே செம்மையாக தண்ணி காட்டியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா பாக்ஸ் ஆபிஸிலும் லவ் டுடே வசூலில் தெறிக்கவிட்டுள்ளதாம்.

கொண்டாடிய ஓடிடி ரசிகர்கள்
யாருமே எதிர்பாராத தருணத்தில் லவ் டுடே படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வெற்றி கோலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தியேட்டர் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள், நள்ளிரவு முதலே நெட்பிளிக்ஸில் கண்டுகளித்து வருகின்றனர். ஓடிடியிலும் யாரும் எதிர்பார்க்க முடியாத வரவேற்பு லவ் டுடே படத்திற்கு கிடைத்துள்ளதாம். வெளியானது முதல் இந்தப் படத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.

தியேட்டர்களில் குறையாத கூட்டம்
லவ் டுடே ஓடிடியில் வெளியான பின்னரும் கூட தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் எப்போதும் போல ரஸ்ஸாகவே இருக்கின்றது. தொடர்ந்து 3 வாரங்களாக தியேட்டர் பாக்ஸ் ஆபிஸில் முன்னணியில் இருக்கும் லவ் டுடே, இந்த வாரமும் கலெக்ஷனில் சொல்லி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இவானா சத்யராஜ், ராதிகா ஆகியோர் லவ் டுடே படத்தில் நடித்துள்ளனர். 2கே கிட்ஸ்களின் காதல் எப்படி இருக்கிறது என ஜாலியாக காட்டியுள்ளார் பிரதீப். இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் பிரதீப்பின் புதிய படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அதில், அவரே ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சீக்கிரமே விஜய் நடிக்கும் படத்தையும் பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.