ஓடிடியில் வெளியான பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ட்வீட்டுக்கு கீழேயே கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நாமளும் சைலன்ட்டாக ஒரு பைலிங்குவல் படத்தை பண்ணி தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து விடலாம் என விஜய், தனுஷ் வழியை பின் பற்றினார்.
ஆனால், அவர் போட்ட கணக்குக்கு இயக்குநர் அனுதீப் மொத்தமாக வேட்டு வைத்து விட்டார். தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களை சரியாக சிரிக்கக் கூட வைக்கவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று பிரின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், மீண்டும் ரசிகர்கள் அந்த படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஓடிடியில் வெளியானது பிரின்ஸ்
அமேசான் பிரைம் ஓடிடியில் நேற்று காந்தாரா வெளியான நிலையில், இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா மற்றும் பிரேம்ஜி நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான பிரின்ஸ் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், தியேட்டரை தவிர்த்த ரசிகர்கள் ஓடிடியிலாவது ஒரு முறை பார்க்கலாம் என படத்தை பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ட்வீட்
மிஸ்டர் லோக்கல், சீமராஜா படங்களின் தோல்விக்கு பிறகு இனிமேல் கொடுத்தா ஹிட் படங்களைத் தான் கொடுக்கணும் என முடிவு கட்டிய சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தை கொடுத்து 100 கோடி நாயகனாக மாறினார். அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து அந்த படத்தையும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைத்தார். ஆனால், பிரின்ஸ் அவருக்கு கைகொடுக்கவில்லை. இருந்தாலும் நம்ம படத்தை ரசிகர்கள் ஓடிடியிலாவது பார்க்கட்டும் என பிரின்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்கிற அறிவிப்பு ட்வீட்டை சிவகார்த்திகேயன் தற்போது பதிவிட்டுள்ளார்.

விட்டுக் கொடுத்த ரசிகர்கள்
அஜித், விஜய் படங்கள் என்னதான் சுமாராக இருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் ஒருபோதும் அந்த படங்கள் நல்லா இல்லை என சொல்லவே மாட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அப்படியெல்லாம் இல்லாமல் ரொம்ப நேர்மையாக, "பல வெற்றியை தந்தாலும் சரி ஒரு தோல்வியை தந்தாலும் Sk அண்ணுக்கு Fans ஆன Brother's & sister's நாங்க இருக்கோம்." என கமெண்ட் போட்டுள்ளனர்.

எங்களுக்கு வாரியர் உங்களுக்கு பிரின்ஸ்
தமிழ் இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு ரசிகர்களுக்கு சமீபத்தில் வாரியர் எனும் மொக்கைப் படத்தை கொடுத்தார். அதே போல தெலுங்கு இயக்குநரான அனுதீப் உங்களுக்கு பிரின்ஸ் படத்தை கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சூர்யாவை விட பெட்டர்
சிவகார்த்திகேயன் ப்ரோ உங்களுடைய மார்க்கெட் நடிகர் சூர்யாவின் மார்க்கெட்டை விட பெட்டராக இருக்கு. நீங்க டயர் 1 நடிகர் லிஸ்டில் வந்துட்டீங்க.. நல்ல ஸ்க்ரிப்ட்களை மட்டும் தேர்வு செய்து நடித்தால் எங்கேயோ போய்விடுவீங்க என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஒன்லி ஃபார் எஸ்கே
தீபாவளிக்கே இந்த படத்தை தியேட்டரில் பார்த்து பட்டது போதாதா? என்கிற ரேஞ்சுக்கு வந்த ரசிகர் ஒன்லி ஃபார் எஸ்கே அண்ணா என கமெண்ட் போட்டு பிரின்ஸ் படத்தை ஓடிடியிலும் பார்க்க முடிவு செய்து விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரன் இயக்குநரை ஃப்ரீயா விடுங்க
சிவகார்த்திகேயன் அண்ணா தயவு செய்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வினை ஃப்ரீயா விடுங்க.. இப்ப எல்லாம் பெரிய நடிகர்கள் நடித்தாலும் இயக்குநர் யாரு? அவரோட முதல் படம் எப்படி இருக்குன்னு தான் பார்க்கிறாங்க.. கண்டிப்பா மாவீரன் படம் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும் என நம்புகிறேன் என சிவகார்த்திகேயன் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட கழுவி ஊத்துற கமெண்டுகளாகவே குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











