Don't Miss!
- News
மாதா, பிதா, குரு, தெய்வம், மனைவிக்கு மரியாதை..கல்லூரி விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
“ Puzhu திரைப்படம் “ OTT யில் நேரடி ஒளிபரப்பு…மம்முட்டி இதில் இப்படிப்பட்ட கதாபாத்திரமா ??
கேரளா : நடிகர் மம்முட்டி அடுத்த " Puzhu " மலையாள திரைப்படம் நேரடியாக SonyLiv ல் மே 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
நடிகை பார்வதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனரான Ratheena PT என்பவர் இயக்கியுள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?

மம்முட்டி முதல் முறை
நடிகர் மம்முட்டி தனது சினிமா வாழ்க்கையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மலையாளம் மட்டுமில்லாமல் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நேரடி படங்களில் கதாநாயகனாக நடித்து பெயர் வாங்கியவர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். தற்போது அவர் நடித்த Puzhu திரைப்படம் நாளை SonyLiv சேனலில் நேரடி ஒளிபரப்பாக உள்ளது. Puzhu படத்தில் ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மம்முட்டி நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல நடிகர் மம்முட்டி நடித்த படங்களில் நேரடி OTT யில் ரிலீஸாகும் முதல் படம் இதுவே. அவரது போட்டியாளரான நடிகர் மோகன்லால் சமீபத்திய படங்களில் Bro Daddy மற்றும் Marakkar திரைப்படங்கள் நேரடி OTT யில் ரிலீசானது.

இதுவரை பார்க்காத
நடிகை பார்வதி நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர். Puzhu படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவலை டீசர் போல சொல்லியுள்ளார். " Puzhu " படத்தில் நாம் இதுவரை பார்க்காத மம்முட்டியை நாம் பார்க்க போகிறோம் என பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் டிரைலர் நடிகை பார்வதி சொன்னது தெரியப் படுத்துவது போல அமைந்திருக்கிறது. டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதேபோல படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது.

கதை களம்
" Puzhu " படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அடிப்படையில் இந்தக் கதை தந்தை மகன் உறவு பற்றியதாக இருக்கும் என தெரிய வருகிறது. மகனை அடக்க நினைக்கும், மனமாற்றம் செய்ய நினைக்கும் தந்தை. அதை முழுவதுமாக ஏற்க மறுக்கும் மகன். அவரது எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாத மகன். இதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது Puzhu திரைப்படம். படத்தின் தயாரிப்பாளர் Anto Joseph படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்து மம்முட்டியை பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். " எனக்கு மம்முட்டியை பல வருடங்களாகத் தெரியும். ஆனால் என்றும் அவரை அடிக்க தோன்றவில்லை. இந்த படத்தை பார்த்த பிறகு அவரை முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் போல் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மம்முட்டி vs பார்வதி
மம்முட்டி கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு ரிலீஸான படம் Kasaba. அப்போது நடிகை பார்வதி அந்த படத்தை குறிப்பிட்டு மம்முட்டியை குறிப்பிட்டு மறைமுகமாக விமர்சனம் செய்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது Puzhu திரைப்படத்தில் பார்வதி மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் பலருக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் இயக்குனரிடம் எப்படி பார்வதி இந்த படத்திற்குள் வந்தார் என கேட்க, " ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததும் கதாநாயகிகள் தேடலில் நடிகை பார்வதி பெயர் வந்தது. நாங்கள் சந்தித்து கதை சொன்னோம். கதை பிடித்திருந்ததால் அவர் ஒத்துக் கொண்டார் என பதிலளித்துள்ளார். படத்திற்கு Puzhu என ஏன் பெயர் வைத்தீர்கள் என்ற கேள்விக்கு இந்தக் கதைக்கு இதுவே சரியான பெயர் என தோன்றியதாக இயக்குனர் பதில் அளித்துள்ளார். மம்முட்டி பார்வதியின் ஜோடி, மம்முட்டி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற நிகழ்வுகள் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.