பிரபாஸின் ஆக்சன் சீனை கலாய்த்த நெட்பிளிக்ஸ்… பொங்கிய பாகுபலியன்ஸ்… உண்மைய சொன்னா கசக்காதா பின்ன?
ஐதராபாத்: பாகுபலி மூலம் பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வரும் பிரபாஸ், தற்போது சலார், ப்ராஜக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹோ' திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
இந்நிலையில், சாஹோ படத்தின் ஆக்சன் காட்சியை முன்வைத்து பிரபல ஓடிடி தளத்துக்கு எதிராக பிரபாஸ் ரசிகர்கள் டிவிட்டரில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பான் இந்தியா ஸ்டார்
பான் இந்தியா என்ற சொல்லுக்கு பிள்ளையார் சுழி போட்டது ராஜமெளலியின் பாகுபலி படம் தான் என்பது ரசிகர்களின் கருத்து. அதனால், இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸும் இப்போது பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது. ஆனால், அதனைத் தொடர்ந்து வெளியான பிரபாஸின் படங்கள் எதுவும் பெரிய அளவில் சக்சஸ் கொடுக்கவில்லை.

சாஹோவை கலாய்த்த நெட்பிளிக்ஸ்
முக்கியமாக பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான 'சாஹோ' திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது. அதேபோல், இந்தாண்டு ரிலீஸான ராதே ஷ்யாம் படமும் பிரபாஸின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் வசூலில் சரிவை சந்தித்தது. இந்நிலையில், சாஹோ படத்தில் வரும் ஆக்சன் காட்சியை இந்தோனேஷியா நெட்பிளிக்ஸ் தளம் கலாய்த்துள்ளது, பிரபாஸ் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

டிவிட்டரில் பொங்கிய பாகுபலியன்ஸ்
சாஹோ படத்தின் பிரபாஸ் ஸ்கை டைவிங் செய்யும் ஒரு ஆக்சன் சீனில், கிராபிக்ஸ் காட்சிகள் செயற்கைத்தனமாக இருந்தது. இதனை ஜாலியாக பகிர்ந்த நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம், "என்னவொரு ஆக்சன் சீன்" என கேப்ஷன் போட்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த பிரபாஸ் ரசிகர்கள், நெட்பிளிக்ஸை புறக்கணிப்பதாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில், Unsubscribe Netflix என ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நெட்பிளிக்ஸ்க்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், நெட்பிளிக்ஸை தங்களது செல்போனில் அன் - இன்ஸ்டால் செய்யும் ஸ்கீரீன் ஷாட்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மைய சொன்னா கசக்கும்
மேலும், சில ரசிகர்கள் சாஹோ படத்தின் தோல்வியையும் மோசமான கிராபிக்ஸ் காட்சிகளையும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், பிரபாஸை ட்ரோல் செய்வதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் நெட்பிளிஸ்க்கு எதிராக ட்வீட் செய்துள்ளனர். ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் டீசர் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஆதிபுருஷ் டீசரிலும் கிராபிக்ஸ் காட்சிகள் ஒர்த்தாக இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவந்தனர். இந்நிலையில், தற்போது சாஹோ படத்தின் ஆக்சன் சீனை நெட்பிளிக்ஸ் ஓடிடி கலாய்த்துள்ளது, பிரபாஸ் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











