செல்வராகவனின் சாணி காயிதம்... ஓடிடி.,யில் எப்போ ரிலீஸ் தெரியுமா

சென்னை : டைரக்டர் செல்வராகவன், சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் லீட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். செல்வராகவனின் தங்கை ரோலில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரத்தில் ஷுட்டிங்

ராமேஸ்வரத்தில் ஷுட்டிங்

கைதி படத்திற்கு இசையமைத்த சாம் சிஎஸ் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யாமினி யங்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆக்ஷன் கதை

ஆக்ஷன் கதை

1980 களில் நடப்பது போன்ற ஆக்ஷன் கதையாக சாணி காயிதம் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் டைரக்டர் அருண், ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்ற டைரக்டர் தியாகராஜன் குமாரராஜாவிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியவர்.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

அருண் மாதேஸ்வரன் தான் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று படத்திற்கு வசனம் எழுதியவர். தற்போது சாணி காயிதம் படத்தை வித்தியாசமான கதையில் இயக்கி உள்ள இவர், இந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

பிப்ரவரியில் ரிலீஸ்

பிப்ரவரியில் ரிலீஸ்

லேட்டஸ்ட் தகவலின் படி, சாணி காயிதம் படம் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது உறுதியாகி விட்டதாம். இதற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் ஒப்பந்தம் போட்டு விட்டதாம். இந்த படம் 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசானில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

வயலன்ட் படமா இது

வயலன்ட் படமா இது

கீர்த்தி சுரேஷ் இதுவரை சென்டிமென்ட், நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே நடித்துள்ளார். ஆனால் சாயி காயிதம் படம் இதுவரை அவர் நடித்ததிலேயே மிகவும் வயலன்ட் ஆன படமாக இருக்கும் என படக்குழு கூறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X