Don't Miss!
- Finance
4 மாற்றங்கள்.. வருமான வரியில் இதைத் தாண்டி எதுவும் கிடைக்காது.. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..!
- News
"டார்கெட்".. 9 மாநிலம் + 2024 நாடாளுமன்ற தேர்தல்.. பட்ஜெட் 2023ல் வரப்போகும் "மெகா" அறிவிப்புகள்?
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சாய் பல்லவியின் செம ஸ்ட்ராங் மெசேஜ் படம் கார்கி.. எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸாகுது தெரியுமா?
சென்னை: சாய் பல்லவியின் கார்கி போன்று நல்ல படங்கள் திரைக்கு வந்தாலும், முன்னணி ஹீரோ நடிக்கவில்லை, குடும்பத்தோடு சென்று பார்க்கும் ஜாலியான படம் இல்லை என ரசிகர்கள் பலரும் தியேட்டருக்கு சென்று சின்ன பட்ஜெட் படங்களை வெகுவாக குறைத்து வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு மாதத்திற்குள் அந்த படங்கள் ஓடிடி தளங்களில் வந்து விடுவதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பதும் தியேட்டரை தவிர்ப்பதற்கான முக்கிய காரணமாக மாறி விட்டது.
விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களை அள்ளிய சாய் பல்லவியின் கார்கி திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாக உள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

கவர்ச்சிக்கு நோ
நிவின் பாலியின் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்ததில் இருந்து கார்கி படம் வரைக்கும் நடிகை சாய் பல்லவி கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கருத்துள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சேலை அணிந்தும், சுடிதார் அணிந்து நடித்தாலும், நல்லா நடித்தால் ரசிகர்கள் நமக்கு கிடைப்பார்கள், நல்ல கதாபாத்திரங்கள் நமக்காக உருவாக்கப்படும் என்பதை பெரிதும் நம்பும் சாய் பல்லவி தொடர்ந்து அந்த ரூட்டில் பயணித்து வருகிறார். கடை போட்டுக் கூட பிழைத்துக் கொள்வேன் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சமீபத்தில் அவர் பேசியது கூட டிரெண்டாகி வருகிறது.

கார்கி கதை என்ன
சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் செக்யூரிட்டியான தனது தந்தையும் கைது செய்யப்பட, அப்பாவை காப்பாற்ற போராடும் மகளாக நடித்துள்ளார் சாய் பல்லவி. திக்குவாய் வழக்கறிஞரான காளி வெங்கட் சாய் பல்லவியின் அப்பாவை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றினாரா? உண்மையான குற்றவாளி யார்? கடைசியில் கிளைமேக்ஸ் எப்படி இதயத்தை நிறுத்துகிறது என வித்தியாசமான கதைக் களத்துடன் உருவான படம் தான் இந்த கார்கி.

ஓடிடி ரிலீஸ் எப்போ
கடந்த மாதம் ஜூலை 15ம் தேதி தியேட்டரில் வெளியான சாய் பல்லவியின் கார்கி திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி உள்ள கார்கி திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலா பால் vs சாய் பல்லவி
ஆகஸ்ட் 12ம் தேதி தியேட்டரில் கார்த்தியின் விருமன், அமீர்கானின் லால் சிங் சத்தா (ஆகஸ்ட் 11) உள்ளிட்ட படங்கள் மோத உள்ளன. அதே நேரத்தில் ஓடிடியில் சாய் பல்லவியின் கார்கி வெளியாக உள்ள நிலையில், அமலா பாலின் கடாவர் திரைப்படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தியேட்டரை போலவே வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஓடிடியிலும் பயங்கர கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.