சர்தார் முதல் அந்தப் படம் வரை…? இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்ல என்னென்ன இருக்குன்னு பாருங்க…
சென்னை: திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரமும் தளங்களில் முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளன.
அதேபோல் சில படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எந்த படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

கார்த்தியின் சர்தார்
திரையரங்குகளைப் போலவே ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சில படங்கள் திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகின்றன. இன்னும் சில திரைப்படங்கள் நேரடியாகவே ஓடிடியில் வெளியாகின்றன. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் கார்த்தியின் சர்தார் தான் டாப்பில் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான சர்தார், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஆஹா ஓடிடியில் வரும் 18ம் தேதி சர்தார் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையரங்குகளில் சர்தார் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

அனல் மேலே பனித்துளி
வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் நேரடியாக சோனி ஓடிடியில் வரும் 18ம் தேதி வெளியாகிறது. கெய்சர் ஆனந்த் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்ட்ரியா லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அனல் மேலே பனித்துளி படத்தின் ட்ரெய்லரை சில தினங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில், வெற்றிமாறன் தயாரித்துள்ளதால் அனல் மேலே படத்தை பார்க்கவும் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதேபோல் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி வெப் சீரிஸின் அடுத்த எபிசோட், ஆஹா ஓடிடியில் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியின் காட்ஃபாதர்
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் திரைப்படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். சிரஞ்சீவிக்கு கம்பேக் கொடுத்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். காட்ஃபாதர் படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் செய்த ரசிகர்கள், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க வெயிட்டிங்கில் உள்ளனர்.

தெலுங்கு, மலையாளம் ரசிகர்களுக்காக
அதேபோல், தெலுங்கில் 'இரவாதம்' திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்தப் படத்திற்கும் தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், ஜீ5-இல் வெளியாகவுள்ள 'Aha Naa Pellanta' என்ற தெலுங்கு வெப் சீரிஸ்க்கும் ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. Aha Naa Pellanta வெப் சீரிஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் Wonder Women' திரைப்படம் வரும் 18ம் தேதி சோனி ஓடிடியில் வெளியாகிறது. நதியா, பார்வதி, நித்யா மேனன், பத்மபிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் ரசிகர்கள் கவனத்திற்கு
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்கள், வெப் சீரிஸ்கள் தவிர ஹாலிவுட்டில் 1899 series, R.I.P.D. 2: Rise of the Damned, Christmas with You இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '1899 series' என்ற வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல், R.I.P.D. 2: Rise of the Damned திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகிறது. மேலும், Christmas with You படமும் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











