For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செப்டம்பரில் ஓடிடியில் வெளியாகும்..படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ!

  |

  சென்னை : கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடியில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் படம் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த சின்ன பட்ஜெட் படங்கள் பல நேரடியாகவே இணையதளத்தில் வெளியாகிவிடுகின்றன.

  இதுமட்டும் மில்லாமல் திரையரங்குகளில் படம் பார்ப்பதை விட ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது.

  அந்த வகையில் செப்டம்பரில் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என பார்க்கலாமா?

  இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை தெரிஞ்சுக்கலாமா.. ஆர் யூ ரெடி? இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை தெரிஞ்சுக்கலாமா.. ஆர் யூ ரெடி?

  மை டியர் பூதம்

  மை டியர் பூதம்

  மஞ்சப்பை, கடம்பன் படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மை டியர் பூதம். இப்படத்தில் அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன், இமான் அண்ணாச்சி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், குழந்தைகளுக்கான ஃபான்டஸி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மை டியர் பூதம் திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

  விக்ராந்த் ரோணா

  விக்ராந்த் ரோணா

  அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்து கன்னடத்தில் உருவான படம் 'விக்ராந்த் ரோணா'. கடந்த ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.95 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. படத்தில் நீரூப் பண்டாரி, நீதா அசோக், மதுசூதன் ராவ், ரவிசங்கர் கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக வெளியான இத்திரைப்படம் செப்டம்பர் 2ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

  Cuttputlli

  Cuttputlli

  பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு திரையரங்கில் வெளியானத் திரைப்படம் கட்புட்லி (Cuttputlli). இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அக்ஷக் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடித்துள்ளார். இந்தி திரைப்படம் கட்புட்லி விஷ்ணுவிஷால் நடிப்பில் தமிழில் வெளியான 'ராட்சசன்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்காகும். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

  Dated and Related

  Dated and Related

  செப்டம்பர் 2 முதல் Netflix வெளியாக உள்ள புதிய வெப் சீரிஸ் Dated and Related. இந்த வெப்தொடர் பயங்கரமான டேட்டிங் ரியாலிட்டி ஷோவாகும். பிரான்சின் தெற்கில் உள்ள ஒரு வில்லாவில் ஒரு கேம் ஷோ நடக்கிறது. அதில் கவர்ச்சியான முரட்டு சிங்கிள்கள் அதாவத உடன்பிறந்த சகோதரன், சகோதரிகள் ககலந்து கொண்டு தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால்,சகோதர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களின் சகோதருக்கோ சகோதரிக்கோ அப்பட்டமாக காட்டப்படும்

  காட்டேரி

  காட்டேரி

  இயக்குநர் டீகே இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்த 'காட்டேரி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், 'லொள்ளு சபா' மனோகர், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 2-ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தி டைரி ஆஃப் சீரியல் கில்லர்

  தி டைரி ஆஃப் சீரியல் கில்லர்

  இந்தியன் ப்ரிடேட்டர் சீசன் 2இன் மற்றொரு தொடர்தான் தி டைரி ஆஃப் சீரியல் கில்லர். ஆகஸ்ட் 20ந் தேதி இதன் டிரைலர் வெளியானதில் இருந்து இந்த வெப் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்தியன் பிரிடேட்டர் சீசன் 1ல் நாட்டையே உலுக்கிய கொடூரமான தொடர் கொலையாளிகளில் ஒருவரான சந்திரகாந்த் ஜா மீதான விசாரணையைப் பற்றி விவாதித்தது. தி டைரி ஆஃப் சீரியல் தொடர் கொலையாளியின் உண்மைக் கதையா அல்லது இந்தியன் பிரிடேட்டர் 2 உண்மைக் கதையா என இந்த தொடரைக்காண காத்திருக்கின்றனர்.

  English summary
  cuttputlli, Kaatteri and The Diary of a Serial Killer september ott release movies and web series list
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X