She Hulk Episode 2 Recap: நீங்க இனி சூப்பர் ஹீரோவாவே வாதாடலாம்.. என்னென்ன சொல்றாங்க பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பல்கா இருக்கிறவனுக்கு ஹல்க் என டைட்டில் வைத்த மார்வெல் நிறுவனம், பெண்ணுக்கும் அதே சக்தி வந்ததும் தலைப்பை பற்றி ரொம்ப மண்டையை போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் ஷீ ஹல்க் என வைத்து விட்டனர்.

Recommended Video

Lakshmi Manju | ரஜினின்னு சொன்னாலே தன்னால ஸ்டைல் வந்துடும் | *INTERVIEW

முதல் எபிசோடில் ரியல் ஹல்க் சொல்லிக் கொடுக்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்தும் பாடங்களை கேட்காமல் அவரையே புரட்டி எடுத்து விடுகிறர்.

இந்நிலையில், அடுத்ததாக வெளியாகி உள்ள இரண்டாவது எபிசோடில் ஷீ ஹல்க் என்னவெல்லாம் செஞ்சாருன்னு விரிவாக இங்கே பார்ப்போம்..

வாதாடும் போது ஹல்கா மாறலாமா

வாதாடும் போது ஹல்கா மாறலாமா

என்னதான் ஷீ ஹல்காக சக்தி கிடைத்தாலும் அதெல்லாம் தனக்கு வேண்டாம். நான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற போவதில்லை. வழக்கறிஞராக என் வேலையை தொடர்ந்து பார்ப்பேன் என ப்ரூஸ் பேனரிடம் சண்டைப் போட்டு சொல்லிட்டு வந்து நீதிமன்றத்தில் வாதாடும் போது, அங்கே வரும் ஒரு பிரச்சனையை ஷீ ஹல்காக மாறி தடுக்கிறார்.

வேலை போச்சு

வேலை போச்சு

இவர் ஒரு வழக்கறிஞர் இல்லை ஷீ ஹல்க் என தெரிந்ததுமே ஹீரோயினின் வேலையை பிடுங்கி விடுகின்றனர். அதுவரை லாஜிக் நல்லாத்தான் போகுது. பல இடங்களில் முறையிட்டும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், இது மார்வெல் வெப்சீரிஸ் ஆச்சே, ஒரு நீதி நிறுவனம் சூப்பர் ஹீரோவாக இருப்பதாலே அவருக்கு வழக்கறிஞர் வேலையை கொடுக்கின்றனர். ஆனால், சூப்பர் ஹீரோவாகத்தான் வாதாட வேண்டும் என்று ஷீ ஹல்கிற்கே ஷாக் கொடுக்கின்றனர். நமக்கும் நல்லா உருட்ட ஆரம்பிச்சிட்டாங்க என்றே தோன்றுகிறது.

ஹல்க்கை கொலை செய்யத் துடித்தவன்

ஹல்க்கை கொலை செய்யத் துடித்தவன்

முதல் கேஸே ஹல்க்கையே கொலை செய்யத் துடித்த பிளான்ஸ்கி என்பவரை சிறையில் இருந்து விடுவிக்கும் வழக்கு தான். முதலிலேயே முடியாது என்று மறுத்தாலும், பின்னர் பிளான்ஸ்கியை சிறையில் சந்தித்து பேசி பார்த்ததும், நான் இப்போலாம் ஹைக்கூ எழுதுறேன். கோபமே படுறதில்லை கொரில்லாவா (மிருகமாக) மாறுவதில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி வீச அவருக்கு வாதாட முன் வருகிறார்.

வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு

வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு

அதை எல்லாம் நம்பி இந்த வழக்கை எடுப்பதற்கு முன்பாக ஹல்க்கிடம் ஒரு வார்த்தை சொல்லிடலாம். அப்புறம் அவர் கோபித்துக் கொள்ளப் போகிறார் என நினைத்து அவருக்கு போன் செய்து பேச, அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவன் எனக்கும் ஒரு ஹைக்கூ அனுப்பினான் என ஹல்க் சொன்னதும் அந்த வழக்கை எடுக்க சம்மதிக்கிறார். ஆனால், டிவியை போட்டுப் பார் என உயர் அதிகாரி சொல்ல, அந்த சிறையில் இருந்து தப்பித்து மிருகமாக வில்லன் என்ட்ரி கொடுக்கும் காட்சியுடன் இரண்டாம் எபிசோடு நிறைவடைகிறது. ஷீ ஹல்க்காக டட்டியானா மஸ்லானி இரண்டாவது எபிசோடிலும் மாஸ் காட்டுகிறார். ஆனால், ஆக்‌ஷன் பிளாக் இந்த எபிசோடில் இல்லையே என ரசிகர்கள் அப்செட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X