தியேட்டரில் 100 கோடி வசூல்...டானின் அடுத்த டார்கெட் ஓடிடி

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் தியேட்டரில் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டரில் 100 கோடி வசூல் செய்த இந்த படம் விரைவில் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது.

அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கிய டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அனிருத் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Sivakarthikeyans Don movie to release Ott on this date

மே 13 ம் தேதி டான் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்து வருகிறது.

காமெடி சென்டிமென்ட் படமாக உருவாக்கப்பட்ட இந்த படம் பள்ளி, கல்லூரி கால சேட்டைகள், தந்தை - மகன் பாசம் என அனைத்தையும் கலந்து, ஜாலியாக சொல்லி இருந்தார் சிபி சக்கரவர்த்தி. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. பிரபலங்கள் பலர் பாராட்டிய இந்த படத்தை பார்த்து விட்டு, கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

டான் படத்தை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி, அனிருத் ஆகியோரை தனித்தனியாக போனில் அழைத்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். ரிலீசான 5 நாட்களில் 50 கோடிகளை தாண்டிய டான் படத்தின் வசூல் 12 நாட்களில் 100 கோடிகளை தாண்டி உள்ளது. இதனை லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வலிமை, பீஸ்ட், மாஸ்டர் படங்களின் வசூலை டான் படம் ஈசியாக முந்தியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் விரைவில் 200 கோடி வசூல் கிளப்பிலும் டான் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டான் படம் விரைவில் ஓடிடி.,யிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜுன் 10 ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டான் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான் படத்தை மிகப் பெரிய தொகை கொடுத்து நெட்ஃபிளக்ஸ் தளம் வாங்கி இருந்தது.தியேட்டரை தொடர்ந்து ஓடிடி.,யில் டான் படம் கலக்கி வருவதால் ரசிகர்கள் செம உற்சாகமாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X