240 நாடுகளில் என் வெப்சீரிஸ் வெளியாகுது.. வதந்தி டிரைலர் ரிலீஸ்.. குஷியில் எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான சுழல் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் அவர்கள் தயாரித்துள்ள புதிய வெப்சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாக போகிறது. தற்போது அதன் த்ரில்லிங்கான டிரைலர் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, நாசர், லைலா உள்ளிட்டோர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

ஓடிடியில் எஸ்.ஜே சூர்யா

ஓடிடியில் எஸ்.ஜே சூர்யா

இந்தியளவில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் ஓடிடியில் புதிய வெப்சீரிஸ்களில் நடித்து வருகின்றனர். தமிழ் திரையுலகிலும் பல டாப் ஹீரோக்கள் ஓடிடி பக்கம் ஒதுங்க யோசித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் வதந்தி வரும் டிசம்பர் 2 முதல் வெளியாகிறது.

வதந்தி வெப்சீரிஸ்

வதந்தி வெப்சீரிஸ்

ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்க அதனை போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே. சூர்யா விசாரிக்கும் கிரைம் த்ரில்லர் கதை தான் இந்த வதந்தி. புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் வெளியான சுழல் வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக வதந்தி வெப்சீரிஸ் வெளியாகி மிரட்ட காத்திருக்கிறது.

விசாரணை முதல் வதந்தி வரை

விசாரணை முதல் வதந்தி வரை

இந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விசாரணை வெப்சீரிஸில் விமல் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சுழல் வெப்சீரிஸில் கதிர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். ஃபிங்கர் டிப் 2 வெப்சீரிஸில் பிரசன்னாவும் தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸில் அருண் விஜய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்த நிலையில், வதந்தி வெப்சீரிஸில் எஸ்.ஜே. சூர்யா காக்கி சட்டையை மாட்டியுள்ளார். இயக்குநர்களுக்கு போலீஸ் கதாபாத்திரத்தை தவிர வேறு கதாபாத்திரமே யோசிக்க தெரியாதா என்கிற கேள்வியும் எழுகிறது. விசாரணை, சுழல் மற்றும் வதந்தி மூன்றிலுமே கிராமத்து ஸ்லாங் பேசும் போலீஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

240 நாடுகளில்

240 நாடுகளில்

அவதார் 2வுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அமேசான் பிரைமில் வெளியாக உள்ள எஸ்ஜே சூர்யாவின் வதந்தி வெப்சீரிஸ் 240 நாடுகளில் வெளியாகப் போவதாக குஷி இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா செம குஷியாக போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி இந்த வெப்சீரிஸ் வெளியாகிறது.

ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா

ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா

யா.. யா.. யா.. வதந்தி இனிமே வதந்தி இல்லை.. நிஜமாக போகுது.. பான் இந்தியாலாம் இல்லை.. பான் வேர்ல்ட் வெப்சீரிஸ் இது என எஸ்.ஜே. சூர்யா செம ஹேப்பியாக ட்வீட் போட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வதந்தி டிரைலரை பார்த்து மாநாடு படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட போலீஸ் கதாபாத்திரம் கலக்குங்க என வாழ்த்தி வருகின்றனர்.

இங்கேயும் லைலா

இங்கேயும் லைலா

நடிகை லைலா மீண்டும் நடிக்க வந்த நிலையில், தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த வெப்சீரிஸில் கொல்லப்படும் வெலோனி (சஞ்சனா) கதாபாத்திரத்தின் அம்மாவாக நடித்துள்ளார் லைலா. என் மகளை பற்றிய வதந்திகள் பரவக் கூடாது என அவர் பேசும் அந்த வசனம் தான் டைட்டிலாகவே மாறுகிறது. ஒரு இளம் பெண்ணின் மரணம் எத்தனை வதந்திகளுக்கு வித்தாக அமைகிறது என்பதை உணர்த்தவே இப்படியொரு வெப்சீரிஸ் உருவாகி உள்ளதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X